நவம்பர் மாதத்தில் செயற்கை மழை பெய்விக்கப்படும் மந்திரி காகோடு திம்மப்பா பேட்டி


நவம்பர் மாதத்தில் செயற்கை மழை பெய்விக்கப்படும் மந்திரி காகோடு திம்மப்பா பேட்டி
x
தினத்தந்தி 15 Aug 2017 4:50 AM IST (Updated: 15 Aug 2017 4:50 AM IST)
t-max-icont-min-icon

நவம்பர் மாதத்தில் கண்டிப்பாக செயற்கை மழை பெய்விக்கப்படும் என்று மந்திரி காகோடு திம்மப்பா கூறினார்.

சிவமொக்கா,

சிவமொக்கா மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று காலையில் மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் திட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பு மந்திரியும், மாநில வருவாய்த்துறை மந்திரியுமான காகோடு திம்மப்பா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி ராகேஷ் குமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவி ஜோதி எஸ்.குமார், துணைத்தலைவி வேதா விஜயகுமார் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் முடிந்த பிறகு மந்திரி காகோடு திம்மப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

செயற்கை மழை

சிவமொக்கா மாவட்டத்தில் இந்த ஆண்டும் வறட்சியே நிலவுகிறது. வறட்சி நிலையை எதிர்கொள்ள மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டும் மாநிலத்தில் போதிய அளவு பருவமழை பெய்யவில்லை. வறட்சியான சூழ்நிலை நிலவி வருவதை பார்க்கும்போது வருத்தம் அளிக்கிறது.

செயற்கை மழையை பெய்விக்க மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நவம்பர் மாதத்தில் கண்டிப்பாக செயற்கை மழை பெய்விக்கப்படும். தற்போது உள்ள சூழ்நிலையில் 60 சதவீத மழைக்காலம் முடிந்துவிட்டது என்றே சொல்லலாம். இம்மாதத்தில் வரும் நாட்களிலும், அடுத்த மாதத்திலும்(செப்டம்பர்) மழை வரும் என்று எதிர்பார்க்கிறோம். மழை நன்றாக கொட்டித்தீர்த்தால் மட்டுமே விவசாய பிரச்சினை, குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் தீரும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story