கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இன்று உறியடி திருவிழா பிரமிடு அமைத்து தயிர்பானை உடைக்கிறார்கள்
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இன்று உறியடி திருவிழா நடக்கிறது. இதற்காக இளைஞர்களும், இளம்பெண்களும் பிரமிடு அமைத்து தயிர்பானை உடைக்கிறார்கள்.
மும்பை,
மும்பையில் சமய பாகுபாடு இன்றி எல்லா பண்டிகைகளும் கோலாகலமாக கொண்டாடப்படும். அவற்றில் மிக முக்கியமானது கிருஷ்ண ஜெயந்திக்கு அடுத்த நாள் நடைபெறும் உறியடி திருவிழா ஆகும்.
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் மும்பை, தானே மட்டுமின்றி மாநிலம் முழுவதும் ‘தஹிஹண்டி’ அல்லது உறியடி என்று அழைக்கப்படும் தயிர்பானை உடைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்திக்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஒவ்வொரு பகுதிகளிலும உள்ள குழுவினர் பிரமிடு அமைத்து தயிர் பானை உடைக்கும் பயிற்சியில் ஈடுபடுவார்கள். இந்த குழுவினர் கோவிந்தாக்கள் என அழைக்கப்படுகின்றனர்.
உலக புகழ்பெற்றது
இந்த குழுவினர் உறியடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தயிர் பானையை உடைத்து அசத்துவார்கள். மும்பையில் தயிர் பானையை உடைக்கும் குழுவினருக்கு சில இடங்களில் லட்சக்கணக்கில் பணம் பரிசாக வழங்கப்படும். எனவே கிருஷ்ண ஜெயந்தி விழா மும்பையில் களைகட்டும். வீதியெங்கும் திருவிழா கோலம் காணும். பெண்களும் ஆண்களுக்கு நிகராக தயிர் பானைகளை பிரமிடு அமைத்து உடைத்து அசத்துவார்கள். வெளிநாட்டினரும் மும்பையில் நடக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் உறியடியை கண்டு ரசிப்பார்கள். மும்பையில் நடைபெறும் இந்த உறியடி திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவிந்தாக்கள் 11 அடுக்குகளுக்கு மேல் பிரமிடு அமைத்து தயிர் பானைகளை உடைத்து வந்தனர். 2 ஆண்டுகளுக்கு முன் உறியடி விழாவிற்கு உச்சநீதிமன்றம் பல்வேறு கெடுபிடிகளை விதித்தது. அதாவது 20 அடிகளுக்கு (தோராயமாக 5 அடுக்கு) மேல் மனித பிரமிடு அமைக்க கூடாது, 14 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களை தயிர் பானை உடைக்க ஈடுபடுத்த கூடாது போன்றவைகள் ஆகும். ஆனாலும் உற்சாகம் குறையாமல் உறியடி விழா நடந்து வருகிறது.
Related Tags :
Next Story