பெஸ்ட் பஸ் விபத்தில் உயிரிழந்த தமிழ் வாலிபரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு


பெஸ்ட் பஸ் விபத்தில் உயிரிழந்த தமிழ் வாலிபரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு
x
தினத்தந்தி 15 Aug 2017 5:04 AM IST (Updated: 15 Aug 2017 5:04 AM IST)
t-max-icont-min-icon

பெஸ்ட் பஸ் விபத்தில் உயிரிழந்த தமிழ் வாலிபரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

மும்பை திலக்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவபெருமாள் சங்கரலிங்கம். தமிழர். இவரது மகன் வெங்கடராமன்(வயது27). சாப்ட்வேர் என்ஜினீயர். மாதம் ரூ.42 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார். மேலும் விரைவில் வெளிநாடு செல்ல இருந்தார்.

இந்தநிலையில் வெங்கடராமன் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி இரவு செம்பூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பெஸ்ட் பஸ் ஏற்படுத்திய விபத்தில் வெங்கடராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.

ரூ.30 லட்சம் இழப்பீடு

இந்தநிலையில் சிவபெருமாள் சங்கரலிங்கம் பெஸ்ட் நிர்வாகத்திடம் இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், மகன் உயிரிழப்பிற்கு காரணமான பெஸ்ட் நிர்வாகம் ரூ.1½ கோடி தர உத்தரவிடவேண்டும் என கூறியிருந்தார்.

தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணையில், பெஸ்ட் பஸ் டிரைவரின் அலட்சியத்தால் தான் வெங்கடராமன் விபத்தில் பலியானது நிரூபணமானது. இதையடுத்து விபத்தில் பலியான தமிழ் வாலிபரின் குடும்பத்திற்கு பெஸ்ட் நிர்வாகம் ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 

Next Story