பீரங்கி தளமான ராயக்கோட்டை


பீரங்கி தளமான ராயக்கோட்டை
x
தினத்தந்தி 15 Aug 2017 4:45 AM GMT (Updated: 2017-08-15T10:04:28+05:30)

ராயக்கோட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பீரங்கி.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு முன்னதாக நமது நாட்டை மன்னர்களும், குறுநில மன்னர்களும் ஆட்சி செய்தனர். அப்போது ஆங்கிலேயர்கள் அடிக்கடி மன்னர்களுடன் போர் புரிந்து வந்தனர். அந்த வகையில் கி.பி. 1792-ம் ஆண்டு ஆகஸ்டு 19, 20, 21, 22 மற்றும் 23-ந் தேதி ஆகிய 5 நாட்கள் கிழக்கிந்திய கம்பெனி ஆங்கிலேய படை தளபதி கவுடி தலைமையில் திப்பு சுல்தானை எதிர்த்து கிருஷ்ணகிரியை அடுத்த ராயக்கோட்டையில் பீரங்கி போர் நடைபெற்றது. அந்த போரில், கோட்டை பகுதியை தளபதி கவுடி தலைமையிலான ஆங்கிலேயர்கள் பிடித்தனர்.

அந்த சம்பவங்களை நினைவு கூரும் வகையில் ராயக்கோட்டையில் இன்றும் போர் நடந்ததற்கான அடையாளமாக தளபதி கவுடி பயன்படுத்திய பீரங்கி போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 10 அடி நீளமும், 4½ அடி சுற்றளவும் கொண்ட அந்த பீரங்கி இன்றும் கம்பீரமாக உள்ளது. இது ராயக்கோட்டை 200 ஆண்டுகளுக்கு முன்பு பீரங்கி தளமாக இருந்ததை நினைவு கூருகிறது.

Next Story