சுதந்திரதின வெள்ளிவிழா நினைவுத் தூண்


சுதந்திரதின வெள்ளிவிழா நினைவுத் தூண்
x
தினத்தந்தி 15 Aug 2017 12:00 PM IST (Updated: 15 Aug 2017 12:00 PM IST)
t-max-icont-min-icon

நாடு சுதந்திரம் அடைந்து, 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, 1972-ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

அதற்காக பல்வேறு இடங்களில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது. அப்போது நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள அரசு ஆண்கள் பள்ளி வளாகத்திலும், நினைவுத் தூண் ஒன்று நிறுவப்பட்டது. அதில் 15.8.1972 முதல் 14.8.1973 முடிய ‘இந்தியாவின் அரசியலமைப்பு முகப்புரை’ என கல்வெட்டில் எழுதப்பட்டு உள்ளது.
அந்த கல்வெட்டில் இடம் பெற்றுள்ள வாசகங்கள்:-

இந்தியாவின் மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு தன்னுரிமை மக்களாட்சி குடியரசாக அமைக்கவும், அதன் மக்கள் அனைவருக்கும் சமுதாயம், பொருளாதாரம், அரசியல் இவற்றில் நீதியும், எண்ணம், வெளியீடு, கோட்பாடு, சமயம், வழிபாடு இவற்றில் சுதந்திரமும், தகுதி, வாய்ப்பு இவற்றில் சமத்துவமும் கிடைக்குமாறு செய்யவும், தனியொருவர் மாண்பு, நாட்டின் ஒற்றுமை இவற்றை உறுதிப்படுத்தும் உறவாண்மையினை அனைவரிடமும் ஓங்குறச் செய்யவும், உளமார்ந்த உறுதி பூண்டு நம் அரசியல் நிர்ணய சபையில் 1949 நவம்பர் 26-ம் நாள் அன்று இவ்வரசியலமைப்பினை ஏற்றுச் சட்டமாக இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் எழுதப்பட்டு உள்ளது.

இந்தியாவின் அரசியலமைப்பு முகவுரையில் எழுதப்பட்ட இந்த வாசகங்கள், நமது நாட்டின் ஒருமைப்பாட்டின் மாண்பை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

Next Story