ஆஷ்துரையின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டிய தமிழக இளைஞர்கள்
செங்கோட்டை முத்துச்சாமி பூங்காவில் உள்ள வாஞ்சிநாதன் நினைவு மணிமண்டபம். வாஞ்சிநாதன், சாவடி அருணாசலம் பிள்ளை
தென் ஆப்பிரிக்காவுக்கு சென்ற மகாத்மா காந்தி இந்தியா திரும்பி வருவதற்கு முன்பே ஆங்காங்கே விடுதலை போராட்டம் வெடிக்கத் தொடங்கி இருந்தது. வடக்கே பகத்சிங்கின் தலைமையில் இளைஞர் படை வெடிகுண்டுகளுடன் வீதிக்கு வந்தது. அந்த வேளையில்தான் இந்தியாவின் தென்பகுதியான செங்கோட்டை மண்ணில் ஒரு படை விடுதலை போரில் தங்கள் இன்னுயிரை கொடுக்கத் தயாரானது. அவர்களது ஒரே லட்சியம் நாட்டின் விடுதலை என்பது மட்டும்தான்.
அதற்காக எதையும் செய்யத் தயாராயினர். அவர்களில் ஒருவர் வாஞ்சிநாதன். மற்றொருவர் சாவடி அருணாசலம் பிள்ளை. ஆங்கிலேய அரசை எதிர்த்து பேசி விட்டு ஒருவர் கூட தப்பிச் செல்ல முடியாத காலம் அது. இதையெல்லாம் கேள்விப்பட்ட சங்கரன் என்ற வாஞ்சிநாதன் பி.ஏ. படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு சுதந்திர போராட்ட களத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இளம் வாலிபர்களாக இருந்த வாஞ்சிநாதன், சாவடி அருணாசலம் பிள்ளை ஆகியோர், மேலும் பல இளைஞர்களை ஒன்று இணைத்து ஆலோசனை நடத்தினர். அப்போதுதான் வங்க புரட்சியாளர்களுடன் இந்த இளைஞர்களுக்கு தொடர்பு ஏற்பட்டது.
வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கும், சுப்பிரமணிய சிவாவுக்கும் சிறையில் இழைக்கப்பட்ட கொடுமைகளை கண்டு தமிழகம் ரத்தக்கண்ணீர் சிந்தியது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான, சரியான ஆயுதம் வன்முறைதான் என்று இளைஞர்கள் கருதினர். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள செண்பகாதேவி அருவி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் முக்கியமானதும், இறுதியாகவும் கருதப்பட்ட கூட்டம்தான் ‘சித்திரை மீட்டிங்’ என்று அழைக்கப்பட்ட கூட்டம். அந்த கூட்டம் செங்கோட்டை சாவடி அருணாசலம் பிள்ளை வீட்டில் 1911-ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் நடந்தது. அந்த கூட்டத்துக்கு வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார். சித்திரை மீட்டிங்கில் ஆங்கிலேயர் அனைவரையும் ஒழித்து கட்ட வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாக விடுதலை போராட்ட வீரர்களை துன்புறுத்திய அப்போதைய திருநெல்வேலி கலெக்டராக இருந்த டபிள்யூ.எஸ்.ராபர்ட் வில்லியம் ஆஷ்துரையை தீர்த்து கட்ட வேண்டும் என்றும் முடிவு செய்தனர். அப்பணியை செய்து முடிக்க அந்த கூட்டத்தில் வாஞ்சிநாதன் உள்பட 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் பெயர் விவரம்:-
1.வாஞ்சிநாதன் (செங்கோட்டை), 2.நீலகண்ட பிரம்மச்சாரி (தஞ்சாவூர்), 3.சங்கர கிருஷ்ணய்யர் (கடையநல்லூர்), 4.சிதம்பரம்பிள்ளை (தென்காசி), 5.சுப்பையா பிள்ளை (தூத்துக்குடி), 6.ஜெகநாதய்யர் (செங்கோட்டை), 7.அரிகர அய்யர் (செங்கோட்டை), 8.ராமசாமி பிள்ளை (புனலூர்), 9.மகாதேவய்யர் (செங்கோட்டை), 10.வந்தே மாதரம் சுப்பிரமணியன் (எட்டயபுரம்), 11.தாமரய்யர் (செங்கோட்டை), 12.சாவடி அருணாசலம் பிள்ளை (செங்கோட்டை), 13.எஸ்.வி.அழகப்ப பிள்ளை (செங்கோட்டை), 14.முத்துக்குமாரசாமி பிள்ளை, 15.மாடசாமி பிள்ளை (ஓட்டப்பிடாரம்).
கூட்டத்தில் கலெக்டர் ஆஷ்துரையை கொல்வது யார் என்பதை திருவுளச்சீட்டு போட்டு குலுக்கல் மூலமாக தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். இதற்காக ஒப்பந்த தாளில் 15 பேரும் ரத்த கையெழுத்து போட்டனர். அப்போதே அவர்கள் தங்கள் உயிரை இந்த தாய் நாட்டுக்காக அர்ப்பணிக்க முடிவு எடுத்தனர்.
திருவுளச்சீட்டில் 15 பேருடைய பெயர்களையும் எழுதி குலுக்கி போட்டனர்.
அதில் வாஞ்சிநாதன் பெயர் வந்தது. உடனே வாஞ்சிநாதன் அந்த சீட்டை எடுத்து வீரமுத்தமிட்டு அப்பணியை நானே முடிக்கிறேன் என்று முழக்கமிட்டார். தாய்நாட்டு விடுதலைக்காக தன்னை அர்ப்பணிக்க முன்வந்த போது வாஞ்சிநாதனுக்கு வயது 23. இந்த நேரத்தில்தான் முன்னீர்பள்ளம் ஊரைச் சேர்ந்த சீதா ராமைய்யர் என்பவருடைய மகள் 16 வயதான பொன்னம்மாளை, வாஞ்சிநாதனுக்கு திருமணம் செய்து வைத்தனர். அவரோ இல்லற இன்பத்தை விட தன் தாய்நாட்டின் விடுதலையே பெரிதான இன்பம் என்று நினைத்தார். அவருக்கு துணையாக சாவடி அருணாசலம் பிள்ளை இருந்தார்.
இந்தநிலையில் கலெக்டர் ஆஷ்துரையின் பயண திட்டம் பற்றிய செய்திகள் இவர்களுக்கு கிடைத்தது. 1911-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி கலெக்டர் ஆஷ்துரை திருநெல்வேலியில் இருந்து ரெயிலில் தனது மனைவி மற்றும் ஆங்கிலேய அதிகாரிகள், மெய்க்காப்பாளர்களுடன் மணியாச்சி ரெயில் நிலையம் வழியாக கொடைக்கானலில் படிக்கும் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக பயணம் செய்யப் போவது தெரிய வந்தது. வாஞ்சிநாதன், சாவடி அருணாசலம் பிள்ளையிடம் ஆளுக்கொரு துப்பாக்கி இருந்தது.
‘திருநெல்வேலியில் இருந்து காலையில் புறப்படும் ரெயில் மணியாச்சி ரெயில் நிலையத்தில் 45 நிமிடங்கள் நிற்கும். அப்போது ரெயில்வே கிராசிங் இருக்கும். என்ஜினுக்கு நிலக்கரி போடுவார்கள். பயணிகள் சிற்றுண்டி அருந்த செல்வார்கள். பயணிகள் ரெயிலில் ஏறுவதற்காக அங்கும் இங்குமாக செல்வார்கள். அந்த சமயம் பார்த்து நான் கலெக்டர் ஆஷ்துரை இருக்கும் முதல் வகுப்பு ரெயில் பெட்டி அருகே சென்று ஆஷ்துரையை குறி வைத்து துப்பாக்கியால் சுடுவேன். ஒரு வேளை எனது குறி தவறினால் நீங்கள் (சாவடி அருணாசலம் பிள்ளை) வைத்து இருக்கும் துப்பாக்கியால் ஆஷ்துரையை சுட்டுத் தள்ள வேண்டும்’ என்று வாஞ்சிநாதன் கூறினார். அதற்கு சாவடி அருணாசலம் பிள்ளையும் ஒப்புக் கொண்டார்.
ஜூன் 17-ந் தேதி அன்று காலை 10 மணி அளவில் திருநெல்வேலியில் இருந்து ஆஷ்துரை தனது இளம் மனைவியுடன் ரெயில் என்ஜினுக்கு அடுத்து இருந்த முதல் வகுப்பு பெட்டியில் ஏறினார். ஆஷ்துரை மெய்க்காப்பாளர்கள் அதற்கு அடுத்த பெட்டி யில் ஏறிக் கொண்டார்கள். இவர்கள் ஏறியதும் வாஞ்சிநாதனும், சாவடி அருணாசலம் பிள்ளையும் ரெயில் கடைசி பெட்டியில் (கார்டு இருக்கும் அடுத்த பெட்டி) ஏறிக் கொண்டனர். ரெயில் புறப்பட்டு சிறிது நேரத்தில் மணியாச்சி ரெயில் நிலையத்தில் வந்து நின்றது.
வாஞ்சிநாதன் மெதுவாக ஆஷ்துரை இருக்கும் முதல் வகுப்பு பெட்டி பக்கம் சென்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். இதனைக் கண்ட ஆஷ்துரை, ஆங்கிலத்தில் வாஞ்சிநாதனை பார்த்து கோபமாக திட்டினார். அவ்வளவு தான். அமைதியாக இருந்த வாஞ்சிநாதன் பாயும் புலியாக மாறினார். தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து ஆஷ்துரையை நோக்கி குறி வைத்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆஷ்துரை அவசரமாக எழுந்து தனது தலையில் இருந்த தொப்பியை எடுத்து வாஞ்சிநாதனின் துப்பாக்கியை தட்டிவிட குறி பார்த்து வீசினார். ஆனால் வாஞ்சிநாதனின் கையில் இருந்த துப்பாக்கி விழவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் துப்பாக்கியால் ஆஷ்துரையின் மார்பில் சுட்டார் வாஞ்சிநாதன். ஆஷ்துரை அலறியதும் அடுத்த குண்டும் அவருடைய மார்பை துளைத்தது. இதனால் ஆஷ்துரை ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து பிணமானார்.
வாஞ்சிநாதன் கையில் துப்பாக்கியுடன் நிதானமாக அமைதியாக சபதத்தை முடித்த மனநிறைவுடன் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் மெதுவாக நடந்து சென்றார். அவர் தப்பிச் செல்ல முயற்சிக்கவில்லை. சற்று யோசித்தவர், ஆங்கிலேயே அதிகாரிகளிடம் பிடிபட்டு சித்ரவதை பட்டு சாவதை விட வீர மரணமே மேல் என்று மனதில் துணிச்சலான முடிவுடன் பிளாட்பாரத்தில் இருக்கும் கழிவறைக்குள் சென்று, அதே துப்பாக்கியால் அதன் முனையை வாய்க்குள் வைத்து விசையை தட்டி விட்டு உயிர் நீத்தார்.
சுதந்திர போராட்டத்தில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட வாஞ்சிநாத னுக்கு செங்கோட்டை முத்துச்சாமி பூங்காவில் மணிமண்டபம் கட்டப்பட் டுள்ளது.

Related Tags :
Next Story