புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் தேரடி வீதியில் ரூ.27 லட்சத்தில் சிமெண்டு சாலை கலெக்டர் தகவல்

புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் தேரடி வீதியில் ரூ.27 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கப்படுகிறது என்று கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் ஊராட்சியில் சுதந்திரதினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நேற்று கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் சீராக விநியோகம் செய்தல், மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை பேசியதாவது:-
பெண்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வேண்டும். அதன் மூலம் உங்கள் குடும்பத்தின் சுகாதாரம் பேணி காக்கப்படும். வீட்டின் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்தமாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக நமது மாவட்டம் அறிவிக்கப்பட உள்ளது. உங்கள் இல்லத்தில் கழிப்பிட தேவை இருக்கும் பட்சத்தில் விண்ணப்பித்தால் உடனடியாக கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தடுப்புசுவர்
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் ரூ.1 கோடி செலவில் குளத்திற்கு சுற்றிலும் தடுப்பு சுவர் அமைத்து நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. தேரடி வீதியில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ரெங்கசாமி எம்.எல்.ஏ., பயிற்சி கலெக்டர் சிபிஆதித்யாசெந்தில்குமார், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணகுமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகேசன், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் மணி, மாவட்ட மலேரியா அலுவலர் போத்திபிள்ளை, தாசில்தார் தங்கபிரபாகரன், வட்டாரவளர்ச்சி அலுவலர் துரை மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
சமபந்தி விருந்து
பின்னர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலெக்டர் அண்ணாதுரை, ரெங்கசாமி எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பார்த்திபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story