கரூரில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்: தேசிய கொடியை கலெக்டர் ஏற்றினார்
கரூரில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை கலெக்டர் கோவிந்தராஜ் ஏற்றினார். தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.
கரூர்,
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திரதின விழா கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை 8.30 மணி அளவில் தேசிய கொடியை கலெக்டர் கோவிந்தராஜ் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் நின்றபடி சென்று அவர் பார்வையிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் கோவிந்தராஜ் ஏற்றுக்கொண்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உடன் இருந்தார். அதன்பின்னர் புறாக்களை கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பறக்கவிட்டனர். மூவர்ண பலூன் களையும் அவர்கள் பறக்க விட்டனர்.
விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளை கலெக்டர் கோவிந்தராஜ் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மேலும் நினைவு பரிசுகளையும் வழங்கினார். விழாவில் மொத்தம் 166 பயனாளிகளுக்கு ரூ.86 லட்சத்து 3 ஆயிரத்து 152 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 109 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், சிறப்பாக பணியாற்றிய போலீசார் 23 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.
அதனை தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் நாட்டின் சுதந்திரத்தை போற்றும் வகையிலும், இயற்கை, சுற்றுச்சூழலை பாதுகாத்தலும், தேச ஒற்றுமையை வலியுறுத்தியும், அப்துல் கலாம் முகமூடி அணிந்தபடியும், தேசிய கொடியை கையில் ஏந்தியபடியும் மாணவ- மாணவிகள் நடனமாடினர். இதில் மாணவிகளின் பரதநாட்டியம், கோலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. விழாவில் கலெக்டர் குடும்பத்தினர், மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், மாவட்ட திட்ட அதிகாரி எஸ்.கவிதா, உதவி கலெக்டர்கள் சரவணமூர்த்தி, விமல்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். சுதந்திர தின விழாவையொட்டி மாவட்ட விளையாட்டரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேசிய கொடி ஏற்றப்பட்டதும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
கரூர் கோர்ட்டில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கோர்ட்டு வளாகத்தில் தேசிய கொடியை மாவட்ட முதன்மை நீதிபதி நம்பிராஜன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் குற்றவியல் தலைமை நீதிபதி பார்த்தசாரதி, முதன்மை சார்பு நீதிபதி மணி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவின் செயலாளரும், கூடுதல் உரிமையியல் நீதிபதியுமான ஜெயபிரகாஷ், குற்றவியல் நீதிபதிகள் மோகனவள்ளி, பாக்கியம் மற்றும் வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல கரூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நிலைய மேலாளர் சுரேந்தர்பாபு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளியணை போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தலைமையாசிரியை கனகவள்ளி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமையாசிரியர் தமிழரசன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாணவர்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் வரலாறுகளை எடுத்து கூறும் பேச்சு போட்டி நடைபெற்றது.
வெள்ளியணை தொடக்கப்பள்ளி, ஜெகதாபி அரசு மேல்நிலைப்பள்ளி, தம்மாநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கே.பி.தாழைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, மணவாடி அரசு உயர்நிலைப்பள்ளி, பொரணி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் வெள்ளியணை சுற்றுப்பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் அந்தந்த பள்ளியின் தலைமையாசிரியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். இந்த விழாவில் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளியணை ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிலைய அதிகாரி பானேசிங் மீனா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் ரெயில்வே துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். வெள்ளியணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் பிச்சைமுத்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற விழாவில் தலைவர் நகுல்சாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதேபோல் வெள்ளியணை, ஜெகதாபி, மூக்கணாங்குறிச்சி பாகநத்தம், கே.பிச்சம்பட்டி, மணவாடி, ஏமூர் உள்ளிட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
என்.புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியர் முத்துசாமி தேசிய கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story