மணல் கடத்தல்; 10 பேர் கைது
மணல் கடத்தல் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் ஓரிக்கை பகுதியில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் வந்தது. அதையொட்டி அவர் அந்த பகுதிக்கு போலீசாருடன் சென்றார். அப்போது அங்கு மணல் கடத்துவது தெரியவந்தது. அதையொட்டி சித்தாத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
உத்திரமேரூரை அடுத்த பெருநகர் பகுதி செய்யாறு படுகையில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தப்படுவதாக பெருநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரீனாவுக்கு தகவல் வந்தது. அதையொட்டி அவர் அங்கு போலீசாருடன் சென்றார். அப்போது மணல் கடத்தியது தெரியவந்தது. அதையொட்டி பெருநகரை அடுத்த மேல்பாக்கம் பகுதியை சேர்ந்த வேலு (28), குணசேகரன் (28), கன்னியப்பன் (35), பிரகாஷ் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
புல்லரம்பாக்கம்
திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் புன்னம்பாக்கம், சீத்தஞ்சேரி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார்கள்.அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து அதன் டிரைவர்களான எரையூரை சேர்ந்த நாகராஜன் (28), ஈக்காடு கண்டிகையை சேர்ந்த சேகர் (31), உடன் இருந்த இளங்கோவன் (55), ராஜசேகர் (31) ஆகியோரை கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை
ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு ஓடுகிறது. நேற்று அதிகாலை ஊத்துக்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் மணிமனோகரன் மற்றும் போலீசார் ஆரணி ஆற்று படுகையில் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றார். அப்போது ஒரு கார் ஆரணி ஆற்று ஓரமாக நின்று கொண்டிருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் காரை நெருங்கியதும் அதில் இருந்த வாலிபர் ஓட்டம் பிடித்தார். சப்-இன்ஸ்பெக்டர் மணிமனோகரன் அவரை சாமர்தியமாக மடக்கி பிடித்தார். காரில் சோதனை செய்து பார்த்த போது கடத்துவதற்காக 25 மணல் மூட்டைகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணை செய்ததில் அவர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கீழ்சிற்றபாக்கம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்கிற மணி (22) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story