மும்பை மந்திராலயாவில் தேவேந்திர பட்னாவிஸ் தேசிய கொடி ஏற்றினார்
முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மும்பை மந்திராலயாவில் தேசிய கொடியை ஏற்றினார்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் நேற்று 71-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மந்திராலயாவில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டதால், இதில் கவர்னர் வித்யாசகர் ராவ் கலந்துகொள்ளவில்லை என ராஜ்பவன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல விழாவில் பெரும்பாலான மந்திரிகள் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் சொந்த ஊரில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
மும்பை மாநகராட்சி...
மும்பை சி.எஸ்.டி.யில் உள்ள மாநகராட்சி தலைமையகத்தில் நடந்த விழாவில் மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அவர் திறந்த ஜீப்பில் சென்று தீயணைப்பு படையினர், காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
மத்திய ரெயில்வே தலைமையகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பொது மேலாளர் தேசிய கொடியை ஏற்றினார்.
மழையால் பாதிப்பு
இதேபோல மும்பையில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளிலும் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நேற்று மாநிலம் முழுவதும் பல இடங்களில் மழை பெய்தது. எனவே சில இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்து.
Related Tags :
Next Story