கணவருடன் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு


கணவருடன் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 17 Aug 2017 3:00 AM IST (Updated: 17 Aug 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், பெண் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் காவாங்கரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 40). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

நேற்று முன்தினம் இரவு அசோக்குமார், தனது மனைவி, குழந்தையுடன் சென்னை மூலக்கொத்தலத்தில் உள்ள மாலதியின் தாய் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். புழல் சைக்கிள்ஷாப் ஜி.என்.டி. சாலையில் வந்த போது, அவர்களுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்மநபர்கள், திடீரென மாலதி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர்.

மர்ம நபர்கள் சங்கிலியை பறித்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் 8 மாத குழந்தையுடன் அசோக்குமார், மாலதி ஆகியோர் கீழே விழுந்தனர். இதில் காயம் அடைந்த 3 பேரும் புழலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பினர். இதுபற்றி புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

Next Story