தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தின விழா
தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூர்,
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவாஜி செல்லையா தேசிய கொடியேற்றினார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தூர்ராஜன் தேசிய கொடியேற்றினார். திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அழகர் தேசிய கொடியேற்றினார்.
திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி தேசிய கொடியேற்றினார். கல்லூரி துணை முதல்வர் ஸ்ரீபிரியா செல்வகனி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தேசிய கொடியேற்றினார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
தாலுகா போலீஸ் நிலையம்
திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பிச்சையாவும், திருச்செந்தூர் கோவில் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஷீஜா ராணியும், திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்– இன்ஸ்பெக்டர் ரவிமதியும் தேசிய கொடியேற்றினர். திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தலைமை டாக்டர் பொன் ரவி தேசிய கொடியேற்றினார்.குடியிருப்புவிளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியை சீதா விசாலாட்சி தேசிய கொடியேற்றினார். பள்ளிக்கூட மேலாண்மை குழு தலைவர் செந்தில்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஆறுமுகநேரி முத்து ஹார்டனில் உள்ள பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. பள்ளி தாளாளர் சுப்பையா தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார். பள்ளி பொது மேலாளர் மபத்லால் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் கிறிஸ்டினா பிரபாகரன் வரவேற்றார். பள்ளி மாணவ– மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. சுதந்திர தினவிழாவையொட்டி நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் சந்தோஷ் லோபோ, முகமது மாளின் ஆகியோருக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொழில்அதிபர் குமார்சுப்பையா மற்றும் மாணவ–மாணவிகள், ஆசிரிய–ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. நிறுவன உற்பத்தி பிரிவு துணை பொதுமேலாளர் பிரதீப் நாயர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து, பாதுகாப்பு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் சிறப்பாக பணியாற்றிய 23 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் நிறுவன துணை உதவி தலைவர் சுமதி, மனிதவள பிரிவு பொதுமேலாளர் கேப்டன் சோனிகா, சமுதாய வளர்ச்சி பிரிவு தலைவர் கைலாசம், மனிதவள பிரிவு துணை பொதுமேலாளர் சுதிர்குமார் அனுப் டியோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி
தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் சுதந்திரதின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வங்கியின் இயக்குனர் அரவிந்த்குமார் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் வங்கி இயக்குனர் விக்ரமன், பொதுமேலாளர்கள் கந்தவேலு, ரவீந்திரன், வங்கியின் துணைப் பொது மேலாளர்கள், உதவிப் பொது மேலாளர்கள், மண்டல மேலாளர், தலைமை அலுவலக அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், ஊழியர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
தாலுகா அலுவலகம்
ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த சுதந்திரதின விழாவுக்கு தாசில்தார் நம்பிராயர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார்கள் இசக்கிராஜ், வாமணன், சுசிலா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் நடந்த சுதந்திரதின விழாவுக்கு யூனியன் ஆணையாளர் சிவபாலன் தலைமை தாங்கி தேசிய கொடியேற்றினார். பின்னர் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் யூனியன் அலுவலக ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவ–மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த சுதந்திர தினவிழாவுக்கு தலைமை மருத்துவர் ஜோஷெரில் தலைமை தாங்கி தேசிய கொடியேற்றி, ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார். விழாவில் சித்த மருத்துவர் வசந்தகுமாரி மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் நடந்த சுதந்திர தினவிழாவுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
ஆத்தூர் பள்ளி
ஆத்தூர் சி.சண்முகசுந்தர நாடார் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா நடந்தது. பள்ளி நிர்வாக அதிகாரி கந்தசாமி தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார். விழாவில் தலைமை ஆசிரியர் ரஞ்சித் சிங், துணை முதல்வர் பிருந்தா பிரசன்னா மற்றும் ஆசிரிய–ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதேபோல் சி.சண்முகசுந்தர நாடார் தொடக்கப்பள்ளியில் பள்ளி நிர்வாக அலுவலர் ரங்சித் சிங் தேசிய கொடி ஏற்றினார். பள்ளி முதல்வர் கிரிஜா மற்றும் ஆசிரிய–ஆசிரியைகள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவ–மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Related Tags :
Next Story