திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
திருவாரூர்,
முத்துப்பேட்டை ரகமத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க தலைவர் தனபால் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
திருத்துறைப்பூண்டி அருகே மேலக்கொருக்கை ஸ்ரீசாய் சீனிவாஸ் மெட்ரிக் பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் பள்ளியின் நிறுவனர் டாக்டர்.ஆர்.புஷ்பா தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சி, பேச்சுப்போட்டி, மற்றும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி தாளாளர் கிருஷ்ணகுமார் மற்றும் பள்ளி முதல்வர் யாஸ்மின்குமரேசன், ஆசிரியர்கள் வேலவன்குமார், உடற்கல்வி ஆசிரியைகள் கலந்துகொண்டனர். முடிவில் மக்கள் தொடர்பு அலுவலர் என்.பிரபாகரன் நன்றி கூறினார்.
அரபிக்கல்லூரி
குடவாசல் தாலுகாவில் உள்ள அடவன்குடி ஜாமி ஆ ஜன்னாத்தூன் அரபிக்கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் அப்துர் அஹ்மத் ஹசனி தலைமை தாங்கினார்.
விழாவில் முகமது அலி நாட்டுபண் பாடினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாம்பசிவம், பரக்கத்தாபாத் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். கல்லூரி நிறுவனர் வி.ஏ.ஜெகபர் சாதிக் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் குடவாசல் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகள், தொழில் அதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை ஜாமி ஆ ஜன்னாத்தூன் அரபிக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
நன்னிலம்
நன்னிலம் பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு செயல் அலுவலர் சிவகுமார் தலைமை தாங்கினார். பின்னர் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் கலந்து கொண்ட பள்ளி குழந்தைகளுக்கு, மரக்கன்றுகளை வழங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜூ, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் நாகராஜன், இளநிலை உதவியாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரளம் பேரூராட்சியில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் செந்திலன் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினார்.
நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவில் ஒன்றிய ஆணையர் திருநாவுக்கரசு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) தமிழ்செல்வன், துணை வட்டா வளர்ச்சி அலுவலர்கள் பிரகாஷ், சிவக்குமார், நேரு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குல்ஜார்அலி நன்றி கூறினார்.
குடவாசல்
குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானகிருஷ்ண ரமேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், மணிமாறன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குடவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் செயல் அலுவலர் சமயசந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் அரசு துறை அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
குடவாசல் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உதவி தாசில்தார் முருகேசன், குடவாசல் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானமேரி, எரவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன், குடவாசலில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் (பொறுப்பு) ஜான்பீட்டர் தலைமையில். தமிழ்துறை பேராசிரியர் ரமேஷ்குமார் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.
குடவாசல் அரசு மருத்துவமனையில் நடந்த சுதந்திர தின விழாவில் தலைமை மருத்துவர் வெங்கடேஷ், திருவீழிமிழலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார தலைமை மருத்துவர் ஜெகதீஸ், திருவீழிமிழலை ரக்சனசமிதியில் (பசு மடத்தில்) வ.உ.சிதம்பரனார் பேத்தி மரகதம் மீனாட்சி ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். குடவாசல் ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகள், அனைத்து அரசு தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
மன்னார்குடி
மன்னார்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேரடி, காந்தி சாலை, ஆர்.பி.சிவம் நகர் பகுதியில் உள்ள காந்தி நினைவு மண்டபம் ஆகிய பகுதியில் உள்ள காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் நகரின் பல்வேறு இடங்களில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர். இதில் காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கனகவேல், மாவட்ட துணை தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர், ராமானுஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்துல்கலாம் நகரில் நடந்த சுதந்திர தின விழாவில் அரசு கல்லூரி என்.சி.சி. அலுவலர் இருளப்பன், சேரன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் விஜயகுமார் தலைமையில், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் மனோகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆணையர் (பொறுப்பு) இளங்கோவன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் வர்த்தக சங்க தலைவர் பாரதிஜீவா, நகராட்சி அலுவலர்கள், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கமலராஜன், மன்னார்குடி பூக்கொல்லை ரோட்டில் உள்ள மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் சம்பத், மன்னார்குடியை அடுத்த கருவாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் துரையன் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் கோர்ட்டு வளாகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நீதிபதி வி.பாலசுப்பிரமணியன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் குணசீலி, நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் ஜூலியட்ஜெயசிந்தாள், நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, பேரூராட்சி அலுவலகத்தில் நிர்வாக அதிகாரி சங்கர் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.
நீடாமங்கலம் குளம் தென்கரையில் நடந்த சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் கூட்டுறவு வங்கி தலைவர் ஷாஜஹான் தலைமை தாங்கினார். வர்த்தகர் சங்க தலைவர் ராஜாராமன் முன்னிலை வகித்தார். இதில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நீடாமங்கலம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை மருதங்காவெளி ஒன்றிய பெண்கள் நடுநிலைப்பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம், முத்துப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிராம கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முத்துப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் பேரூராட்சி தலைவர் அருணாசலம், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் நடராஜன், பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மணிமொழியான் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

Related Tags :
Next Story