மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கூலி தொழிலாளி சாவு
காசிமேடு பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராயபுரம்,
திருவொற்றியூர் சாத்துமா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவரது மகன் பார்த்திபன் (வயது 24), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் சரவணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் காசிமேடு சூரியநாராயணன் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே காசிமேட்டை சேர்ந்த பிரதீப், தனசேகர் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென பார்த்திபன் மோட்டார் சைக்கிளுடன் மோதியது.
தொழிலாளி சாவு
இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சரவணன், பிரதீப், தனசேகர் ஆகிய 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து காசிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story