மலைக்கோட்டை கோவிலில் சிலை வைக்கக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
இந்து முன்னணி சார்பில், திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல்,
இந்து முன்னணி சார்பில், திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முத்துக்குமார், நிர்வாகக்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் சஞ்சீவி, பொதுச்செயலாளர் சங்கர்கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மலைக்கோட்டையில் உள்ள அபிராமி அம்மன் கோவிலில், சிலைகளை பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்க என்றும், இந்து முன்னணியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story