அமைச்சர் காமராஜ்- டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் இடையே மோதல் 30 பேர் காயம்
வலங்கைமானில் அமைச்சர் காமராஜ் -டி.டி.வி. தினகரன் ஆதர வாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
வலங்கைமான்,
அமைச்சர் காமராஜ் ஆதரவாளர்களான திருவாரூர் மாவட்ட வலங்கைமான் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் குருமூர்த்தி, சங்கர் ஆகியோரை கட்சி பொறுப்பில் இருந்து டி.டி.வி.தினகரன் நீக்கி விட்டு, புதிய ஒன்றிய செயலாளர்களாக விவேகானந்தம் (கிழக்கு), வின்சென்ட் (மேற்கு) ஆகியோரை நியமனம் செய்தார். இதை தொடர்ந்து குருமூர்த்தி, சங்கர் ஆகியோர் தனது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோருடன் நேற்று காலை வலங்கைமான் கடைத்தெருவிற்கு வந்து டி.டி.வி.தினகரன் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
இதே போல புதிய ஒன்றிய செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள விவேகானந்தம், வின்சென்ட் ஆகியோர் தங்களுடைய ஆதரவாளர்களுடன் வலங்கைமான் கடைத்தெருவில் பட்டாசு வெடிக்கவும், இனிப்பு வழங்கவும் வந்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அமைச்சர் காமராஜ் ஆதரவாளர்கள் அங்கிருந்து ராமர் சன்னதி பஸ் நிறுத்தத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிறுத்தம் அருகே டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களும் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் வலங்கைமான் போலீஸ் நிலையம் அருகே அமைச்சர் காமராஜ் ஆதரவாளர்கள் டி.டி.வி. தினகரன் உருவ பொம்மையை தீவைத்து கொளுத்தி கோஷமிட்டனர். இதை பார்த்து டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களுக்கும், அமைச்சர் காமராஜ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் கல் மற்றும் பாட்டில்களால் தாக்கி கொண்டனர்.
இந்த தகராறில் குருமூர்த்தியின் மகன் குருமாணிக்கம் (வயது 24) உள்பட 30 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story