ஓசூர் அருகே கார் மீது டிப்பர் லாரி மோதியதில் விசுவ இந்து பரிஷத் நிர்வாகி பரிதாப சாவு
ஓசூர் அருகே கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் நிர்வாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓசூர்,
நடவடிக்கை எடுக்கக் கோரி பிணத்துடன் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் அடுத்த கொத்தபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுனில் குமார்்(வயது 35). இவர் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் பாகலூர் பகுதி தலைவராகவும் இருந்தார். பாகலூர் கோட்டை தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களையும் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் 11 மாத ஆண் குழந்தை உள்ளனர்.
இந்த நிலையில் சுனில் குமார் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவிலிருந்து தனது காரில் தேஜா மற்றும் ரோகித் ஆகிய 2 நண்பர்களுடன் சர்ஜாபுரா வழியாக பாகலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை சுனில் குமார் ஓட்டி சென்றார். வழியில் கொத்தபள்ளி அருகே வந்த போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி, கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் சுனில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த தேஜா, ரோகித் இருவரும் ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சுனில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிப்பர் லாரி டிரைவரை கைது செய்தனர். இந்த நிலையில், நேற்று ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சுனில் குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சுனில்குமாரின் உடலை பாகலூர் கொண்டு சென்றனர். அப்போது பாகலூர் பஸ் நிலையம் அருகே சுனில்குமாரின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அவருடைய பிணத்துடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், பாகலூர் வழியாக செல்லும் டிப்பர் லாரிகள் வேகமாக செல்கிறது. அதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. மேலும் லாரியை ஓட்டிச்செல்லும் டிரைவர்கள் பலரும் போதை பொருட்களை உபயோகித்து விட்டு, வண்டிகளை அஜாக்கிரதையாக ஓட்டி செல்கின்றனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாகலூர் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத்தும் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக, அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல், சில மாதங்களுக்கு முன்பு, பாகலூர் பக்கமுள்ள தும்மனபள்ளியில், வேகமாக சென்ற டிப்பர் லாரி மோதியதில் அப்பகுதியை சேர்ந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story