மத்திய, மாநில அரசு திட்டங்கள் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
மத்திய, மாநில அரசின் திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பேசியதாவது:- விவசாயிகள் பசியோடு இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளும் செயல்பட வேண்டும். மத்திய, மாநில அரசின் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறைதீர்க்கும் கூட்டம் கடமைக்காக நடத்தப்படாமல், விவசாயிகளின் கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் தான். உங்களுடைய அனைத்து குறைகளும் எனக்கு நேரிடையாக வந்து சேரும். அந்த குறைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் விவசாயிகள் பலர் குறைகளை சுட்டிக் காட்டி பேசினார்கள். அப்போது அவர்கள் பேசியதாவது:- ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. அதிகாரிகள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி விண்ணப்பங்களை நிராகரிக்கின்றனர். கூட்டுறவு சங்கங்களில் உண்மையான விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதில்லை. சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று தாமதமின்றி வழங்க வேண்டும்.
வசிஷ்ட நதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏரிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அரசு அலுவலர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருகிறார்களா? என்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி இருந்தும் ஆத்தூர் தாலுகா பகுதிகளில் மண் எடுக்க வரும் வண்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். இந்த வண்டியை விடுவிக்க அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். விடுபட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
இதற்கு கலெக்டர் ரோகிணி பதில் அளித்தும் பேசும் போது, “ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விவசாயிகளின் விண்ணப்பங்கள் அனைத்தும் மறுபரிசீலினை செய்யப்படும். மேலும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்“ என்றார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், வேளாண்மை இணை இயக்குநர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிவடைந்த பின்னர் கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறும் போது, ‘கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் உதவிகள் வழங்கப்படாமல் இழுத்தடித்து வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கள ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்கள் விவசாயிகளை நேரடியாக சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிய வேண்டும். அவ்வாறு கள ஆய்வு மேற்கொள்ளாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

Related Tags :
Next Story