2040-ல் நாம் சந்திக்க வேண்டிய சவால்கள்
பல்லாயிரம் ஆண்டுகளாக மனித சமுதாயத்தின் அடிப்படை தேவைகள் என்று கருதப்பட்டவை உணவு, உடை மற்றும் இருப்பிடம்.

ஆனால், சமீபகாலத்தில் இந்த பட்டியலில் செல்போனும், மோட்டார் வாகனமும் இடம்பெற்றுவிட்டன.
இன்றைய வாழ்க்கை முறையில் உணவு இல்லாமல் கூட சராசரி மனிதனால் சில நாட்கள் வாழ்ந்துவிட முடியும். ஆனால், செல்போன் இல்லாமல் ஒருநாள்கூட வாழ முடியாது என்ற சூழ்நிலை உள்ளது.
அதேபோன்று, வீட்டிற்கு அருகிலுள்ள கடைக்குச் சென்று வர, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வர, உள்ளிட்ட அன்றாட குடும்ப வேலைகளில் தொடங்கி எந்த ஒரு காரியமாக வீட்டிலிருந்து வெளியே சென்றுவர வேண்டுமென்றாலும், மோட்டார் சைக்கிள், கார் போன்ற மோட்டார் வாகனங்கள் இல்லாமல் செயல்பட முடியாது என்ற நிலை நகரங்களில் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி 2001-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்த மொத்த மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 5 கோடியே 50 லட்சம். இந்த எண்ணிக்கை 2012-ம் ஆண்டில் 15 கோடியே 94 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 12 ஆண்டுகளில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. 2001-ம் ஆண்டில் 3 கோடியே 85 லட்சமாக இருந்த இரு சக்கர மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 2012-ம் ஆண்டில் 11 கோடியே 54 லட்சமாக உயர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கையும் 12 ஆண்டுகளில் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் மோட்டார் வாகனங்கள் வெளியிடும் புகையில் கணிசமான அளவிற்கு நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள் சில அடங்கியுள்ளன. அவைகளில் குறிப்பிடத்தக்கது ‘கார்பன் மோனாக்சைடு’.
மூளை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் பணியை ரத்தத்திலுள்ள, ‘ஹீமோகுளோபின்’ என்ற ரத்த சிவப்பு அணுக்கள் செய்து வருகின்றன. இந்த பணியைச் செய்ய விடாமல் தடுக்கும் குணம் கொண்டது கார்பன் மோனாக்சைடு என்ற நச்சு வாயு.
மோட்டார் வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகையால், சுற்றுச்சூழல் மற்றும் காற்று மண்டலம் மாசு அடைந்ததைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டில் இந்தியாவில் 11 லட்சம் பேர்கள் உயிர் இழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே செல்லும்.
தொழிற்சாலைகள் மற்றும் மோட்டார் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, காடுகளை அழித்தல் உள்ளிட்ட சில காரணங்களால் காற்று மண்டலம் அதிக அளவில் மாசு அடைகிறது. அதன் விளைவாக ‘பசுமை இல்ல பாதிப்புகள்’ ஏற்படுகின்றன. இதன் காரணமாக பருவகால நிலை மாற்றம், தட்பவெப்ப நிலை உயர்வு, கடும் வறட்சி, கடல் நீர் மட்டம் உயர்ந்து கடலோர நகரங்களுக்கு பாதிப்பு ஏற்படுதல் போன்ற பல்வேறு அசம்பாவித நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
2014-ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் மாசு அதிகமாக உள்ள ‘டாப் 20’ நகரங்கள் குறித்து செய்த ஆய்வில், 13 இடங்களை இந்திய நகரங்கள் பிடித்துள்ளதும், முதல் இடத்தை டெல்லி பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்குச் சில கட்டுப்பாடுகளை டெல்லி அரசு விதித்தது. அதைத் தொடர்ந்து மோட்டார் வாகனங்களால் ஏற்படும் மாசுத்தன்மை டெல்லி நகரில் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக நாடுகளில் மாசு அதிகமாக உள்ள ‘டாப் 20’ நகரங்களில் 10 இடங்கள் இந்தியாவில் உள்ளது என்றும், டெல்லி 11-வது இடத்தில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்று மண்டலத்திலுள்ள மாசு தன்மையை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டியதின் அவசியத்தைப் பல உலக நாடுகள் உணர்ந்துள்ளன. ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் 2040-ம் ஆண்டிலிருந்து அவர்களது நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டு இயங்கும் வாகனங்கள் முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளன.
இந்த நாடுகள் பெட்ரோல் மற்றும் டீசல் இனிமேல் எரிபொருளாக பயன்படுத்தாமல், அதற்கு மாற்றாக சூரிய சக்தி, காற்று, நீர் போன்றவைகள் மூலம் சுற்றுச்சூழலை மாசு படுத்தாத வகையில் மின்சாரம் உற்பத்தி செய்வதில் தங்களது முழு கவனத்தையும் திருப்பி உள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள எம்.ஐ.டி. பல்கலைக்கழக சுற்றுச்சூழல் பொறியியல் துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடிய வாயுக்களைக் கட்டுப்படுத்தத் தவறினால், இந்த நூற்றாண்டின் இறுதியில், அதாவது 2100-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் வெப்ப அலைகளால் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும், கோடை காலங்களில் விவசாய வேலை மற்றும் திறந்த சூரிய கதிர்வீச்சில் வேலை செய்பவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சவாலை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? அதற்கான தயாரிப்பில் நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கி விட்டோமோ? என்பது குறித்து தெளிவு இல்லை. ஆனால், இந்த சூழலில்,
‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை’
என்ற அவ்வையாரின் மூதுரை நமக்கு ஒரு பாடத்தைப் புகட்டுகிறது. காற்று மண்டலத்தை மாசு படுத்தாமல், சுற்றுச்சூழலைப் பேணிக் காப்பவர்தான் ‘நல்லவர்’. நாமும் நல்லவராக இருக்க முயற்சி செய்வோம்.
-பெ.கண்ணப்பன். ஐ.பி.எஸ்

Related Tags :
Next Story