விவசாயத்தில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் கலெக்டர் சிவஞானம் பேச்சு


விவசாயத்தில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் கலெக்டர் சிவஞானம் பேச்சு
x
தினத்தந்தி 1 Sept 2017 4:30 AM IST (Updated: 31 Aug 2017 11:34 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து தங்களது வருமானத்தை இரட்டிப்பாக முன்வர வேண்டும் என்று கலெக்டர் சிவஞானம் பேசினார்.

விருதுநகர்,

அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், “சபதம் மூலம் சாதிப்போம்–புதிய இந்தியா சிந்தனை“ என்ற தலைப்பில் விழிப்புணர்வு விழா மற்றும் கண்காட்சி கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் பேசும்போது கூறியதாவது:–

இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கி வருகிறது விவசாயம். வேளாண்மைத்துறையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தங்களது வருமானத்தை இரட்டிப்பாக முன்வர வேண்டும். தற்போது மத்திய, மாநில அரசோடு இணைந்து சபதம் மூலம் சாதிப்போம்–புதிய இந்தியா சிந்தனை என்ற தலைப்பில் விவசாயிகளுக்காக விழிப்புணர்வு விழா நடத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகள் மழைநீர் சேமிப்பு மூலம் நீரைப் பாதுகாப்பது மற்றும் உற்பத்தியை பெருக்க உயர் விளைச்சல் தரும் விதைகள் மற்றும் நாற்றுகளைப் பயன்படுத்துதல், மண்ணின் ஆரோக்கியத்திற்கான மண்வள அட்டையை பின்பற்றுதல், விவசாயத்தில் உள்ள இடர்பாடுகளை குறைத்து வருவாயைப் பெறுவதற்கு பயிர் காப்பீட்டை பின்பற்றுதல் போன்ற வழிமுறைகளை கையாண்டு விவசாய வருமானத்தை இருமடங்காக உயர்த்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் வில்லிப்புத்து£ர் பருத்தி ஆராய்ச்சி நிலையம், தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகத்துறை, வேளாண்மை பொறியியல் துறை போன்ற பல்வேறு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளையும், தொழில் முனைவோர்களின் அரங்குகளையும், சிறுதானிய பயிர்கள் மற்றும் வெப்ப மண்டல பழப்பயிர்களின் அரங்குகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அளிக்கப்பட்ட வெள்ளாடு வளர்க்கும் பயிற்சி பற்றியும், தேனீ வளர்ப்பில் பெண்களின் பங்கு குறித்த செயல் விளக்கத்தையும் பார்வையிட்டார்.


Next Story