சீர்காழியில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்
சீர்காழியில் நடந்த டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணியை நகராட்சி ஆணையர் அஜிதாபர்வீன் தொடங்கி வைத்தார்.
சீர்காழி,
சீர்காழி புதிய பஸ் நிலையம் வளாகத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு ரோட்டரி சங்க தலைவர் சுப்ரமணியம், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் ராஜேந்திரன், மண்டல துணை ஆளுனர் சுசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு பேரணியை நகராட்சி ஆணையர் அஜிதாபர்வீன், சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் நகராட்சி ஆணையர் பேசியதாவது:-
தமிழக அரசு டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பல்வேறு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் தேவையில்லாமல் மழைநீர், அசுத்த நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் குடியிருப்பு பகுதிகளில் தேவையில்லாமல் காணப்படும் தேங்காய் ஓடு, உடைந்த பாத்திரங்கள், டயர்கள், உள்ளிட்ட பொருட்களை அப்புறபடுத்தவேண்டும். டெங்கு கொசுஒழிப்பு குறித்து மாணவர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பேரணி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி கடைவீதி, அரசு மருத்துவமனை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாக பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்தது. பேரணியின் போது மாணவர்கள் டெங்கு காய்ச்சல் குறித்தும், டெங்கு ஒழிப்பு குறித்து வாசகம் அடங்கிய அட்டைகளை கையில் எடுத்து சென்றனர். இந்த பேரணியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜி, ரவிச்சந்திரன், சீர்காழி அரசு மருத்துவமனை டாக்டர் மருதவாணன், ரோட்டரி சங்க நிர்வாகிகள், கண்ணன், சோலை, பாஸ்கர், உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், வக்கீல் சுந்தரய்யா, நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், மாணவர்கள், தனியார் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story