செந்துறை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா ஆய்வு


செந்துறை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா ஆய்வு
x
தினத்தந்தி 1 Sept 2017 3:45 AM IST (Updated: 1 Sept 2017 12:19 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி மற்றும் பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி, செந்துறை ஆதிதிராவிட நல மாணவர் விடுதி ஆகியவற்றில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா ஆய்வு மேற்கொண்டார்.

அரியலூர்,

செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை 10 மணிக்கு கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, தலைமையாசிரியர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டினை கலெக்டர் பார்வையிட்டு உரிய நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்தவர்கள், முன் அனுமதி பெற்றவர்கள் மற்றும் தற்செயல் விடுப்பு பெற்றவர்களின் தகவல்களை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அவர் மாணவர்களிடம் தெரிவித்ததாவது:-
11-ம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடம் ‘நீட்’ தேர்வை சந்திக்கும் வண்ணம் மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். மேலும், 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பாடங்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் அனைத்து பாடத்திட்டங்களையும் நடத்த வேண்டும்.

காலாண்டுத்தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பள்ளிகள் வாரியாக மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் பரிசீலனை செய்யப்படும். அதனால் பயிற்சி வகுப்புகளை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சரியான முறையில் அளிக்க வேண்டும். பள்ளிகளில் மாதம் ஒருமுறை ஆய்வு மேற்கொள்ளப்படும். மேலும், பயிற்சி அளிக்கப்படும் விதத்தையும், மாணவர்களின் திறமைகளும் கண்காணிக்கப்படும் என தெரிவித்தார்.

Next Story