மீண்டும் திறக்கப்பட்ட மதுபானக்கடையை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர், பெண்கள் போராட்டம்
செங்குளம் பகுதியில் மீண்டும் திறக்கப்பட்ட மதுபானக்கடையை பா.ஜ.க.வினர், பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை,
குளித்தலை ஊராட்சி ஒன்றியம், திம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது ரெத்தினம்பிள்ளை புதூர். இந்த ஊரின் அருகே உள்ள செங்குளம் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் மதுபானக்கடை கடந்த மாதம் ஜூலை 31-ந் தேதி புதிதாக திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததால் திறக்கப்பட்ட அன்றே இந்த மதுபானக்கடை மூடப்பட்டது.
இப்பகுதியில் மதுபானக்கடை திறக்கப்பட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோமென தெரிவித்து குளித்தலை கோட்டாட்சியர், வட்டாட்சியர், போலீஸ் நிலையத்தில் பா.ஜ.க.வினர் மனு அளித்திருந்தனர். இதன்பிறகும் கடந்த ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி மீண்டும் மதுபானக்கடையை திறக்க முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்த பா.ஜ.க.வினர் மதுபானக்கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று செங்குளம் பகுதியில் மதுபானக்கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதை அறிந்த பா.ஜ.க.வினர் மற்றும் அப்பகுதி பெண்கள் கடையை அகற்றக்கோரி கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:- இங்கு மதுபானக்கடை திறக்கக்கூடாது என பலமுறை போராட்டம் நடத்தினோம். இருப்பினும் மீண்டும், மீண்டும் இங்கேயே மதுபானக்கடை திறக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று (நேற்று) இக்கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபடு வதற்காக வந்தபோது மதுபானக்கடை அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் மற்றும் ஆண்கள் சிலர் எதற்காக எங்கள் இடத்தில் நுழைகின்றீர்கள் என்று கேட்டு தாக்கினர். இதில் சில பெண்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் முற்றுகையிட வந்த ஆண்களையும் மிரட்டினர். இருப்பினும் தாங்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாங்கள் தாக்கப்பட்டதையும், இங்கு மதுபானக்கடை அமைக்கக்கூடாதெனவும், மீறி அமைத்தால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோமென முற்றுகையில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மற்றும் பெண்கள் தெரிவித்தனர்.
இதன்பின்னர் பேசிய அதிகாரிகள் கோரிக்கை குறித்து குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு வழங்குங்கள். இப்பிரச்சினை குறித்து மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் மற்றும் டாஸ்மாக் மேலாளர் அய்யப்பனிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து தங்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் இக்கடையில் உள்ள மதுபாட்டில்களை எடுத்துச்சென்றுவிடுவதாக கூறிவிட்டு மதுபானக்கடை பணியாளர்களும் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

Related Tags :
Next Story