விவசாயிகள் நெல்லை கொட்டி போராட்டம்- மண்வெட்டியுடன் ஆர்ப்பாட்டம்
திருச்சியில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் நெல்லை கொட்டி போராட்டம் நடத்தினர். மேலும் மண்வெட்டியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் உதுமான் முகைதீன், கலெக்டரின் உதவியாளர் (விவசாயம்) சாந்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் ராஜாமணி பேசுகையில், ‘இந்த ஆண்டு இதுவரை இயல்பான மழை அளவு 272.16 மி.மீ. மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் இதுவரை 323.71 மி.மீ. மழை பெய்து உள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான தரமான சான்று நெல் விதைகள் 356.8 டன், சிறு தானியங்கள் 0.5 டன், பயிர் வகைகள் 45.12 டன் மற்றும் எண்ணெய் வித்துக்கள் 8.53 டன் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை வட்டார விரிவாக்க மையங்களை அணுகி உரிய மானியங்களுடன் விதைகளை பெற்று பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 948 விவசாயிகளுக்கு இதுவரை ரூ.23 கோடியே 85 லட்சம் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு உள்ளது’ என்றார்.
இதையடுத்து திருச்சி, கரூர் மாவட்டங்களில் உள்ள காவிரியின் கிளை வாய்க்கால்களான உய்யகொண்டான், கட்டளை, ராமவாய்த்தலை, புள்ளம்பாடி உள்ளிட்ட அனைத்து வாய்க்கால்களிலும் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும், விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், நெல்லுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும், வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில் கலெக்டர் முன் நெல்லை தரையில் கொட்டி போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகள் திடீர் என நடத்திய இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்து வெளியேறிய விவசாயிகள், ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் தோளில் மண்வெட் டியை வைத்திருக்க, அவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது, சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் தண்ணீர் இல்லை. சேலம் மாவட்டத்தில் வடக்கு வாய்க்காலில் முதல்-அமைச்சர் உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அதேபோல் சம்பா சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறந்து விடவேண்டும். கர்நாடகாவிடம் இருந்து 30 டி.எம்.சி. தண்ணீர் பெற்றுத்தர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவர்கள் கோஷம் போட்டனர்.
இதற்கிடையே கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன், மேட்டூர் அணைக்கும், கல்லணைக்கும் இடையில் உள்ள காட்டுப்புத்தூர் வாய்க்கால், வடகரை வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், பெருவளை வாய்க்கால், அய்யன் வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யகொண்டான் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்கள் பல ஆண்டு களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் பாசன கட்டமைப்புகள் சீர்குலைந்து போய் உள்ளன. அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தேவைக்காக காவிரியின் கிளை வாய்க்கால்களில் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும், என்று கோரி பேசினார்.
அய்யன் வாய்க்கால் பாசனதாரர் சங்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் வீரசேகரன் பேசுகையில், கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதை தடுக்க நீர் சேமிப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். உய்யகொண்டான் வாய்க்கால் கழிவுநீரை சுத்திகரித்து விவசாய பயன்பாட்டிற்கு வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் திட்டமிட வேண்டும், என்றார்.
மேலும் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நல சங்க துணை தலைவர் சுப்பிரமணியன், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னத்துரை உள்பட விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

Related Tags :
Next Story