முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் மாகி நெடுஞ்சாலை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
மாகி நெடுஞ்சாலை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது.
புதுச்சேரி,
புதுவை மாநில பிராந்தியமான மாகியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த நிலையில் நில ஆர்ஜிதம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று காலை புதுவை சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்–அமைச்சர் அறையில் நடந்தது.
கூட்டத்திற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நில ஆர்ஜிதம் செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story