மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு இடைநீக்கம் போலீஸ் டி.ஜி.பி. உத்தரவு


மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு இடைநீக்கம் போலீஸ் டி.ஜி.பி. உத்தரவு
x
தினத்தந்தி 1 Sept 2017 4:45 AM IST (Updated: 1 Sept 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் எட்வர்ட். பினாமி பெயரில் இவருக்கு சொந்தமாக சென்னை பெரம்பூரில் பெட்ரோல் விற்பனை நிலையம் இருப்பதாக கூறப்படுகிறது.

மாமல்லபுரம்,

 இங்கு முறைகேடு நடப்பதாக புகார் வந்ததை அடுத்து சமீபத்தில் மணலி பெட்ரோல் கெமிக்கல் நிர்வாக அதிகாரிகள் (சி.பி.சி.எல்.) சிலர் ஆய்வு நடத்தினர். அப்போது அதிகாரிகளை பணி செய்யவிடாமல் துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்ட் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் மத்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ) போலீசில் புகார் செய்தனர். இந்த வழக்கில் நேற்று சி.பி.ஐ. போலீசார் டி.எஸ்.பி. எட்வர்டை குற்றவாளியாக சேர்த்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்ட் குற்றவாளியாக சேர்க்கப்பட்டதால் நேற்று தமிழக காவல் துறை இயக்குநர் (டி.ஜி.பி.) டி.எஸ்.பி. எட்வர்டை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆய்வாளராக பணியாற்றியபோது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story