பயிர்க் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
பயிர்க் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூட்டுறவு வங்கி வளாகத்தில் மாடுகளை கட்டி வைத்தனர்.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே திருக்களார் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து நேற்றுமுன்தினம் திருக்களார், அக்கரைக்கோட்டகம் ஊராட்சிகளை சேர்ந்த அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் கூட்டுறவு வங்கி அருகில் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கோட்டூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் தங்க.வேல்முருகன் தலைமை தாங்கினார். தி.மு.க. ஊராட்சி செயலாளர் முருகானந்தம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராசு, கிளை செயலாளர் சிவதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோட்டூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாலஞானவேல், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் அருகில் உள்ள திருக்களாரில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கூட்டுறவு வங்கி வளாகத்தில் மாடுகளை கட்டி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி சார்பதிவாளர் பிரபா, கோட்டூர் வருவாய் ஆய்வாளர் லட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க பெறாதவர்களுக்கு 30 நாட்களுக்குள் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி-களப்பால் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story