6 மாதங்களாக தெரு மின்விளக்குகள் எரியாததை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி நூதன போராட்டம்
கோட்டூர் அருகே 6 மாதங்களாக தெரு மின்விளக்குகள் எரியாததை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே நொச்சியூர் ஊராட்சி பகுதியில் உள்ள பெரும்பாலான தெருவிளக்குகள் கடந்த ஒரு ஆண்டாக பராமரிக்கப்படவில்லை. இதனால் கடைதெரு மற்றும் முக்கிய வீதிகளில் தெருவிளக்குகள் சுமார் 6 மாதங்களாக எரியவில்லை. இதனால் கிராமம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப் படுகிறது.
இதில் குறிப்பாக இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தமடையான் கிராம பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதிக்கு செல்ல மன்னார்குடி சாலையில் உள்ள பாலாவாய் கிராமம் வழியாக 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். இங்கு செல்லும் சாலை மற்றும் தெரு பகுதியில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் எரியவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இரவில் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து கூத்தமடையான் கிராமமக்களும், அனைத்து கட்சி பிரமுகர்களும் தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நாம் தமிழர் கட்சியினர் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் வீரசேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் உதயகுமார், மாவட்ட நிர்வாகிகள் சிவா, கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
6 மாதங்களாக தெரு மின் விளக்குகள் எரியாததை கண்டித்தும், அலட்சியப்படுத்தும் ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிராகவும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் சீமான் சேது, அய்யாக்கண்ணி, பெருவை கார்த்தி, பொன்னுசாமி, கவியழகன், ராஜ்குமார், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் பாலசுந்தர் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story