தஞ்சையில் பேராசிரியரின் கார் கண்ணாடியை உடைத்து மடிக்கணினி திருட்டு
தஞ்சையில் பேராசிரியரின் கார் கண்ணாடியை உடைத்து மடிக்கணினியை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
புதுச்சேரி முதலியார் பேட்டையை சேர்ந்தவர் சேஷாத்ரி. இவர் அங்குள்ள பாரதியார் கலைக்கூடத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சேஷாத்ரி காரில் நேற்று தஞ்சை வந்தார். பின்னர் அவர் தஞ்சை காந்திஜிசாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்துக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார்.
காரை பூம்புகார் விற்பனை நிலையத்தின் வாசல் அருகே சாலையோரத்தில் நிறுத்தினார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் வாசல் அருகே காரை நிறுத்தாமல் சற்று தள்ளி நிறுத்துங்கள் என கூறினார். இதையடுத்து சேஷாத்ரி காரை சற்று தொலைவில் நிறுத்தி விட்டு பூம்புகார் விற்பனை நிலையத்துக்குள் சென்றார்.
அங்கு பொருட்களை வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்பகுதியில் உள்ள பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த மடிக்கணினி திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் காரை தள்ளி நிறுத்துங்கள் என கூறிய நபர் தான் மடிக்கணினியை திருடிச்சென்றிருக்கலாம் என சேஷாத்ரி கருதினார்.
இது குறித்து அவர் தஞ்சை நகர கிழக்குப்போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மடிக் கணினியை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story