பாண்டுப் பிரைட் மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்


பாண்டுப் பிரைட் மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 1 Sept 2017 4:00 AM IST (Updated: 1 Sept 2017 3:45 AM IST)
t-max-icont-min-icon

பாண்டுப் பிரைட் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

மும்பை,

பாண்டுப் பிரைட் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

திருவள்ளுவர் சிலை

மும்பை பாண்டுப்பில் பம்பாய் திருவள்ளுவர் மன்றம் நிர்வகித்து வரும் பிரைட் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் அரை டன் எடையுடன் 5 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை(சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு பம்பாய் திருவள்ளுவர் மன்ற நிறுவனரும், செயலாளருமான வி.தேவதாசன் தலைமை தாங்குகிறார். தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் வரவேற்று பேசுகிறார்.

விழாவுக்கு எம்.பி.க்கள் கிரித் சோமையா, சஞ்சய் ராவுத், முன்னாள் எம்.பி. சஞ்சய் தீனா பாட்டீல், எம்.எல்.ஏ.க்கள் அசோக் பாட்டீல், சர்தார் தாராசிங், சுனில் ராவுத், கவுன்சிலர்கள் சாக்ஷி தீபக் தல்வி, ஆஷா சுரேஷ், ரவி ராஜா, நித்யானந்த் சங்கர், மாரியம்மாள் முத்துராமலிங்கம், சாரிகா மங்கேஷ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

மும்பை புறநகர் தி.மு.க. செயலாளர் அலிசேக் மீரான் தொடக்கவுரை ஆற்றுகிறார். கவிஞர் செந்தூர்.நாகராஜன் வாழ்த்து கவிதை படிக்கிறார். திருவள்ளுவர் சிலையை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசுகிறார். கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., மராட்டிய மாநில தமிழ்ச்சங்க தலைவர் அண்ணாமலை, தமிழ் இலெமுரியா அறக்கட்டளை தலைவர் குமணராசன், கே.வி.அசோக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசுகின்றனர். முடிவில் பிரைட் மேல்நிலைப்பள்ளி முதல்வர் செலின் ஜேக்கப் நன்றி கூறுகிறார்.

விழா நிகழ்ச்சிகளை இந்திய பேனா நண்பர் பேரவை தலைவர் கருண் ஒருங்கிணைக்கிறார். முன்னதாக திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலின் இன்று(வெள்ளிக்கிழமை) மும்பை வருகிறார். அவரை வரவேற்க தி.மு.க.வினர் திரண்டு வரவேண்டும் என மும்பை தி.மு.க. பொறுப்பாளர் பழனிசாமி மற்றும் புறநகர் தி.மு.க. செயலாளர் அலிசேக் மீரான் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story