“தமிழகத்தில் நல்ல விடிவுகாலம் ஏற்படும் சூழலை தி.மு.க. நிச்சயம் உருவாக்கும்”
“சில நாட்கள் பொறுத்திருங்கள். தமிழகத்தில் நல்ல விடிவுகாலம் ஏற்படும் சூழலை தி.மு.க. நிச்சயம் உருவாக்கித்தரும்“ என்று சேலத்தில் நடந்த திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சேலம்,
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ஆர்.ராஜேந்திரன் மகள் கார்த்திகாவுக்கும், இடங்கணசாலை முருகன் நகர் கோவிந்தராஜ் மகன் ஜி.ஜி.ரகுநாத்துக்கும் நேற்று சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டியில் திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். அப்போது மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் இன்றைக்கு மெஜாரிட்டியாக இருந்து கொண்டிருந்த ஒரு ஆட்சி, இப்போது மைனாரிட்டி ஆக மாறிஉள்ளது. 2006-11 வரை ஆட்சி பொறுப்பில் இருந்த தி.மு.க. மைனாரிட்டி ஆட்சியாகத்தான் இருந்தது. அன்றைக்கு எதிர்க்கட்சியில் இருந்த அ.தி.மு.க. தொடர்ந்து தி.மு.க.வை மைனாரிட்டி ஆட்சி என்றுதான் சொன்னார்கள். அன்று மைனாரிட்டியாகத்தான் இருந்தோம், அதை மறுக்கவில்லை. ஆனால், மைனாரிட்டியாக இருந்தாலும் எந்த பிரச்சினையும் இன்றி 5 ஆண்டுகாலம் தலைவர் கருணாநிதி சிறந்த ஆட்சியை நடத்தி காட்டினார். காங்கிரஸ் துணையோடு, பா.ம.க. ஆதரவோடு இருந்தோம்.
இங்கு மூத்த வக்கீல் தமிழ்மணிபேசும்போது, 89 ஆக இருக்கிறது, தி.மு.க. 117 ஆக மாறவேண்டும் என்றார். 117 அல்ல...200 ஆக மாற வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். அதற்காகத்தான் பொறுத்து கொண்டு இருக்கிறோம். கருணாநிதி வகுத்து தந்த வழியில், கொல்லைப்புறமாக திராவிட முன்னேற்றம் கழகம் என்றைக்கும் ஆட்சிக்கு வராது. மக்களை சந்தித்து, மக்களிடத்தில் உறுதியோடு ஆதரவை பெற்று, அந்த அடிப்படையில் ஆட்சிக்கு வருவோம். கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வருவதற்கு தி.மு.க. துடித்து கொண்டிருக்கவில்லை.
இன்றைக்கு என்ன நிலை நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே கவர்னரிடம், ஆட்சியில் இருக்க கூடிய அ.தி.மு.க.வை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள், இப்போது இருக்கக் கூடிய முதல்-அமைச்சர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, எனவே சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி நம்பிக்கை கோரக்கூடிய நிலை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கையொப்பம் இட்டு தனித்தனியாக கடிதம் கொடுத்து இருக்கிறார்கள்.
ஆகவே, அந்த செய்தி வந்த உடனேயே தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையிலேயே ஜனநாயகத்தின் அடிப்படையிலே நானும் ஒரு கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தேன். இப்படி ஒரு நிலை தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கிறது.
நீங்கள் கூர்ந்து கவனித்து, சிந்தித்து, ஆய்வு செய்து உடனடியாக சட்டமன்றத்தை கூட்டுங்கள். ஒரு முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று அந்த கட்சியை சேர்ந்த ஆளுங்கட்சியில் இருக்க கூடியவர்களே கடிதம் எழுதி தந்திருக்கிறார்கள் என்று சொன்னால் இந்த நிலைக்கு நீங்கள் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என கடிதம் கொடுத்து இருக்கிறேன்.
அதை தொடர்ந்து கடிதம் மட்டும் தந்தால் போதாது என்று கவர்னரை நேரடியாக சந்தித்து நம்முடைய சட்டமன்ற கட்சி துணை தலைவர் துரைமுருகன் தலைமையிலேயே காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பிரச்சினையை சுட்டி காட்டி விளக்கி கடிதத்தை கொடுத்து விட்டு வந்திருக்கிறார்கள்.
கவர்னர் சொன்ன பதில் என்ன?
அதைத்தொடர்ந்து சட்டமன்றத்தில் இடம் பெற முடியாத நிலையில் இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழகத்தில் இருக்கின்ற அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து கவர்னரை சந்தித்து அந்த பிரச்சினையை சொல்லிவிட்டு வந்து இருக்கிறார்கள். கடிதத்தையும் தந்து விட்டு வந்து இருக்கிறார்கள். கவர்னர் மாளிகை சென்று வந்தவர்கள் வெளியில் பத்திரிகையாளர்ளை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார்கள்.
அப்போது அவர்கள், கவர்னரை சந்தித்தோம், கவர்னர் இடத்திலேயே விளக்கம் சொன்னோம். உடனடியாக கவர்னர் என்ன சொன்னார் என்று கேட்டால், நான் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. இது கட்சிக்குள் ஏற்பட்டு இருக்கிற பிரச்சினை. ஆகவே, இதில் நான் தலையிட முடியாது என கவர்னர் சொன்னதாக கூறி இருக்கிறார்கள்.
நான் கேட்க விரும்புவது, இதேபோன்று ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆட்சிக்கு எதிராக 10 பேரை தனியாக பிரித்து கவர்னரை சந்தித்து, இந்த ஆட்சியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உடனடியாக சட்டமன்றத்தை கூட்டுங்கள் என்று கடிதம் கொடுத்து இருந்தார். அப்போது 10 பேர் தான் எதிராக இருந்தார்கள். அதை ஏற்றுக்கொண்டு கவர்னர் உத்தரவிடவில்லையா?
இப்போது 19 பேர் கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால், இப்போது வந்து இருக்கக் கூடிய செய்தி என்ன வென்றால் 20, 22, என தாண்டி இருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் 40 பேருக்கு மேல் ஆட்சிக்கு எதிராக போர்கொடி தூக்குகின்ற ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. தற்போது பந்து என்னிடம் வரவில்லை, வந்த பின்னர் தான் உதைப்பேன் என்று கவர்னர் கூறி உள்ளார்.
சரி, நீங்கள் சொல்வதுபோல பந்து வரவில்லை என்று சொன்னால், 89 எம்.எல்.ஏ.க்களை கொண்டிருக்கிற திராவிட முன்னேற்ற கழகத்திடம் அந்த ‘பந்து‘ வந்தால் கவர்னர் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள். அந்த பந்தை நாங்கள் கொண்டு போறோமா? கொண்டு போகவில்லையா? என்பது ஒரு கேள்விக்குறி. இப்பவே சொல்லி விட்டால் ‘சஸ்பென்ஸ்‘ போய்விடும். அதனால் தான் நேற்றைக்கு சொன்னேன் ஆழ்ந்து, சிந்தித்து, சட்ட ரீதியாக இதை பற்றி எல்லாம் விவாதித்து அதற்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகம் ஒரு முடிவு எடுக்கும். ஆனால், அந்த முடிவு எங்களுடைய சுய நலத்திற்காக அல்ல, தி.மு.க. சுயநலத்திற்காக அல்ல. தமிழ்நாடு மக்களுடைய நன்மைக்காக அந்த முடிவை நிச்சயமாக எடுக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது.
திருமண விழாவில் அரசியல் பேசாமல்போனால்தான் உங்களுக்கெல்லாம் கோபம்வரும். திருமண விழாவில் அரசியல்பேசி நமது இயக்கத்தை வளர்த்தவர்தான் நம்முடைய தலைவர் கருணாநிதி.
திருமண வீட்டிற்குபோனால் பாயாசம் இருப்பதுபோன்று, தி.மு.க. கல்யாணம் என்றால் அரசியல் இல்லாமல் திருமணம் நடக்க வாய்ப்பு இல்லை. இவ்வளவு நாள் பொறுத்து இருந்திருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் நாள்தான். நான் கொஞ்சம் வருஷம், கொஞ்ச மாதம் சொல்லல...கொஞ்ச நாள் தான் சொல்கிறேன்.
ஆக விரைவிலேயே தமிழகத்திற்கு நல்ல விடிவு காலம் ஏற்படுத்தி தருவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதற்கான சூழ்நிலையை நிச்சயமாக தி.மு.க. உருவாக்கி தரும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கட்சி தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற வைரவிழா பொதுக்கூட்டம் நேற்று திருச்செங்கோடு வாலரைகேட் கரட்டுப்பாளையம் பகுதியில் நடந்தது. கூட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நாளை வரும், நாளைமறுநாள் வரும் என சொல்கிறார்கள். கண்டிப்பாக இந்த அரசு மீது விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தே தீரும். மத்தியஅரசு சி.பி.ஐ., அமலாக்கத்துறையை வைத்து தமிழக ஆட்சியாளர்களை மிரட்டி வருகிறது. இவர்கள் மத்திய அரசிடம் மண்டியிட்டு, சரணாகதியாக இருந்து வருகிறார்கள். தமிழகஅரசை காப்பாற்ற நீங்கள் தயாராக இருக்கவேண்டும். ஆண்டு கணக்கில் அல்ல. மாத கணக்கில் அல்ல. நாள் கணக்கில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் உருவாகப்போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story