கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகள் கட்டுவது தமிழக மக்களுக்கு செய்கிற மிகப்பெரிய துரோகம்
கூடங்குளத்தில் 1, 2-வது அணு உலைகள் நஷ்டத்தில் இயங்கி கொண்டு இருக்கும்போது மேலும் 4 அணு உலைகள் கட்டுவது தமிழக மக்களுக்கு செய்கிற மிகப்பெரிய துரோகம் என்று அணுஉலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் கூறினார்.
வள்ளியூர்,
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்தது. இதனை நாகர்கோவிலை சேர்ந்த சுப.உதயகுமார் வழி நடத்தி போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். இவர் மீது அப்போது தேச துரோக வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டது.
மேலும் அவர் வெளிநாடுகளுக்கு சென்று விடாமல் தடுக்கும் விதமாக சுப.உதய குமாரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இந்நிலையில் உதயகுமார் வெளிநாட்டில் நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முடக்கப்பட்ட தனது பாஸ்போர்ட்டை நிவர்த்தி செய்து தரவேண்டும் என்று வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி இந்த வழக்கை வருகிற 7-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
பின்னர் சுப.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்்பட்டுள்ளது. அங்கு 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டு அன்று மாலையே மின்சார உற்பத்தி குறைந்ததாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இரண்டாவது அணு உலை ஒரு மாத காலமாக மின் உற்பத்தி செய்யாமல் முடங்கி கிடக்கிறது.
கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவை மிகைப்படுத்தி இத்தனை மில்லியன் யூனிட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்துள்ளோம் என்று மக்களை திசை திருப்புவதற்கு பதிலாக 1 மற்றும் 2-வது அணு உலைக்கு எவ்வளவு ரூபாய் செலவு செய்தார்கள். ஒரு நாளைக்கு அங்கு எவ்வளவு கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. அங்குள்ள ஊழியர்களுக்கு எவ்வளவு செலவு செய்யப்படுகிறது.
இவ்வளவு பணம் செலவு செய்து நாம் பெறுகிற மின்சாரம் அதற்கேற்ற வகையில் அமைந்து இருக்கிறதா? இது நாட்டு மக்களுக்கு லாபம் தருகிறதா? அல்லது நஷ்டம் தருகிறதா? என்கிற வரவு செலவு கணக்கை அதிகாரிகள் சமர்பிக்க வேண்டும். கூடங்குளம் அதிகாரிகள் உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்லி தமிழக மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
கூடங்குளம் அதிகாரிகளை மத்திய, மாநில அரசுகள் கேள்விகள் கேட்பது இல்லை. ஒட்டு மொத்தத்தில் தமிழகத்தின் தென் மாவட்ட மக்களுக்கு இந்த கூடங்குளம் அணு மின் நிலையம் கேடாக விளங்கி கொண்டு இருக்கிறது. இந்த அணு மின் நிலையத்தில் ஏராளமான அளவில் பணம் செலவு செய்து குறைந்த அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மக்களின் பணத்தை மிகப்பெரிய நஷ்டத்திற்கு ஆளாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். எனவே இது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று நீண்ட காலமாக நாங்கள் கோரிக்கை விடுத்து கொண்டு இருக்கிறோம்.
முதல் மற்றும் 2-வது அணு உலைகள் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டு இருக்கும்போது மேலும் கூடுதலாக 4 அணு உலைகளை கட்டுவது எட்டு கோடி தமிழக மக்களுக்கு செய்கிற மிக பெரிய துரோகம் ஆகும். இந்த துரோகத்தை தமிழகத்தின் மிக பெரிய கட்சிகள் கேள்வி கேட்டு ஆக வேண்டும். தமிழக மக்களுக்காக இவர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story