தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்படாத பா.ஜனதா ஆட்சி நடக்கிறது பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் தேர்ந் தெடுக்கப்படாத பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
நெல்லை,
தமிழகத்தில் ஜனநாயகத்தின் உரிமைக்கு காவலராக இருக்கக்கூடிய கவர்னரே ஆள்தூக்கி அரசியலுக்கும், குதிரை பேர அரசியலுக்கும் அடித்தளம் அமைத்து கொடுக்கும் நிலை தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உடனடியாக சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதற்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்.
நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் தங்களுடைய உரிமையை இழந்து நிற்கிறார்கள். மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வு மூலம் நடந்த மாணவர் சேர்க்கையில் மிகப்பெரிய முறைகேடு நடந்து உள்ளது. இதில் 1000-க்கும் மேற்பட்ட இடங்கள் தமிழகத்தை சாராத மாணவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இருப்பிட சான்றிதழை மட்டும் இணைத்தால் போதும் என்று கூறப்பட்டு உள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களில் ஆதார் அட்டையையும் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. அப்படி ஆதார் எண்ணையும் இணைத்தால் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு இருப்பிட சான்று பெற்று இருப்பது கண்டுபிடிக்கப்படும். எனவே மற்ற மாநிலங்களை போல் தமிழகத்தில் மாணவர்களின் ஆதார் எண், பெற்றோரின் ஆதார் எண்ணை ஏன் இணைக்க அரசு உத்தரவிடவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழக மக்களுக்கு அரசின் திட்டங்கள் வந்தடைய வேண்டுமானால் ஆட்சி மாற்றம் வேண்டும். தற்போதைய ஆட்சியாளர்கள் தங்களுடைய அரசை காப்பாற்றி கொள்ளும் நடவடிக்கையை தான் செய்கிறார்களே தவிர மக்களை பற்றி கவலைப்படவில்லை. தமிழக அரசு மத்திய அரசு சொல்வதை செய்யும் அரசாக உள்ளது. தற்போது தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்படாத பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. மத்திய மந்திரிகளும், தமிழிசை சவுந்திரராஜனும் சொல்வது தான் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட தலைவர்கள் சங்கரபாண்டியன், பழனிநாடார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story