மும்பையில் வாழ்விடமே சமாதியாகி வரும் கொடூரம்
மும்பையில் வாழ்விடமான குடியிருப்புகளே சமாதியாகி வரும் கொடூரம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள்
மனித இனத்திற்கு அடிப்படை தேவை உணவு, உடை, உறைவிடம். ஆதிகாலத்தில் காடுகளில் விலங்கினங்களோடு வாழ்ந்த மனிதன், விலங்கினங்களின் தொல்லையில் இருந்து விடுபட்டு, இயற்கையான மழை, வெயில், புயல் ஆகியவற்றால் ஏற்படும் பேரிடர்களினால் வரும் துன்பங்களில் இருந்து பாதுகாப்பாக வாழ்வதற்கு பல உறைவிடங்களை தேர்ந்தெடுத்தான்.
மலைக்குகைகளிலும், மரத்தின் மேல் பரண் அமைத்தும், அதன் பிறகு படிப்படியாக குடிசையில் ஆரம்பித்து கட்டிடங்கள் கட்டி தான் வாழும் இருப்பிடத்தை சிறப்பாக அமைத்தான். அவையே பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளாக அதிகளவில் பெருகி வருகின்றன. இடப்பற்றாக்குறை காரணமாக வீட்டுமனை வாங்கி அதில் வீடு கட்டுவது சாத்தியம் இல்லாத நிலையில் பெருநகரங்களில் வசிப்பவர்கள் பலரின் பார்வை அடுக்குமாடி குடியிருப்புகள் பக்கமே திரும்பி இருக்கிறது.
தொடரும் விபத்துகள்
நாட்டின் நிதி நகரமான மும்பையில் விண்ணை முட்டும் அளவிற்கு அடுக்குமாடி குடியிருப்புகள் உயர்ந்து நிற்கின்றன. அண்மை காலமாக மும்பையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு வாழ்விடங்கள் குடியிருப்புவாசிகளின் சமாதியாகும் கொடூரம் அரங்கேறி வருகிறது.
ஏனெனில் மும்பையில் கடந்த சில ஆண்டுகளாகவே கட்டிட விபத்துகள் தொடர் கதையாகி வருகின்றன.
1997-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒர்லியில் பூனம் சேம்பர்ஸ் என்ற 7 மாடி கட்டிடம் இடிந்து 5 பேர் பலியானார்கள். 28 பேர் படுகாயம் அடைந்தனர்.
1998-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாந்திரா கிழக்கு கேர்வாடியில் கோவிந்த் டவர்ஸ் என்ற அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 35 பேர் மாண்டனர். 23 பேர் படுகாயம் அடைந்தனர்.
2007-ம் ஆண்டு ஜூலை மாதம் போரிவிலி மேற்கில் லெட்சுமி சாயா கட்டிடம் இடிந்து 26 பேர் உயிரிழந்தனர். 37 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர்.
2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கும்பர்வாடாவில் தத்தா நிவாஸ் என்ற கட்டிடம் இடிந்து 21 பேர் பலியாகினர். 26 பேர் படுகாயம் அடைந்தனர்.
2013-ம் ஆண்டு ஜூன் மாதம் மாகிமில் 5 மாடி கட்டிடம் இடிந்து 10 பேர் உயிரிழந்தனர்.
2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மஜ்காவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த ஆண்டில்...
இந்த ஆண்டில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 3 கட்டிடங்கள் இடிந்து உள்ளன. கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி மும்பை புறநகர் காட்கோபர் மேற்கில் சாய் தர்ஷன் என்ற 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த கட்டிட விபத்தில் குழந்தைகள் உள்பட 17 பேர் பலியானார்கள். 13 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்த மருத்துவமனையில் சட்டவிரோதமாக செய்யப்பட்டு வந்த சீரமைப்பு பணி காரணமாகவே அந்த விபத்து நடந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையை நடத்தி வந்த சிவசேனா பிரமுகர் சுனில் சித்தாப் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 26-ந்தேதி சாந்திவிலியில் கிரேன் விழுந்ததில் கட்டிடம் இடிந்து விழுந்து 5 பேர் பலியானார்கள். இந்தநிலையில், தான் நேற்று பெண்டி பஜாரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலரின் உயிர்களை பலி கொண்டு உள்ளது. தொடர் கதையாகி வரும் கட்டிட விபத்துகள் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மத்தியில் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Related Tags :
Next Story