திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண், தாயுடன் மாயம் போலீசார் தீவிர விசாரணை
தூத்துக்குடியில் நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண், தனது தாயுடன் மாயமானார். அந்த 2 பேரை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி தாமோதரநகரை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி பாக்கியலட்சுமி (வயது 45). இவர்களுக்கு அஜித்குமார் (28) என்ற மகனும், மீனாட்சி (23) என்ற மகளும் உள்ளனர். முருகேசன் இறந்து விட்டார். அஜித்குமார் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். தூத்துக்குடியில் தாயும், மகளும் வசித்து வந்தனர்.
மீனாட்சிக்கும் விளாத்திகுளத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் வருகிற 3-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி சென்னையில் இருந்து அஜித்குமார் தனது தாய்க்கு போன் செய்தார். ஆனால் அவருடைய செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால், அவர் தூத்துக்குடியிலுள்ள வீட்டுக்கு சென்று பார்த்தார்.
அப்போது வீட்டில் பாக்கியலட்சுமி, மீனாட்சி ஆகியோர் இல்லை. மேலும் வீட்டில் இருந்த சில பொருட்கள் மற்றும் திருமணத்துக்காக வாங்கியிருந்த நகைகளையும் காணவில்லை. அவற்றுடன் தாயும், மகளும் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து அஜித்குமார் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த வீட்டில் மீனாட்சி எழுதிய கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், நான் இனி இங்கு வரமாட்டேன், தாயுடன் செல்கிறேன் என்றும் எழுதி இருந்தார்.
இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய் மற்றும் மகளை தேடி வருகின்றனர். திருமணம் நடக்க 2 நாட்களே இருக்கும் நிலையில் இளம் பெண் தாயுடன் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story