தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு 1 மணி வரை கடை திறக்க அனுமதிக்க வேண்டும்
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு 1 மணி வரை கடை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில், மத்திய மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் வெற்றிராஜன் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், மாநில துணை செயலாளர் பொன்ராஜ், தெற்கு மாவட்ட தலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
கூட்டத்தில் மாவட்ட புதிய தலைவராக சோலையப்பராஜா, செயலாளராக ரமேஷ், பொருளாளராக ஜெயராஜ், செய்தி தொடர்பாளராக செந்தில்குமார், இளைஞர் அணி அமைப்பு செயலாளராக தங்கதுரை, மகளிர் அணி அமைப்பு செயலாளராக ராஜம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி) அறிவித்து உள்ளது. இந்த வரி விதிப்பில் பல்வேறு மாற்றங்களை செய்ய வலியுறுத்தி வருகிறோம். அதன்படி 8 மாநிலங்களை சேர்ந்த வணிகர் சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு குழு அடுத்த வாரம் மத்திய மந்திரி அருண்ஜெட்லியை சந்திக்க உள்ளது. மத்திய அரசு வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், வருகிற 20-ந் தேதிக்கு பிறகு கேரளாவில் அனைத்து மாநில நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் ரூ.20 லட்சத்துக்கு குறைவாக ஆண்டு வர்த்தகம் உள்ள வியாபாரிகள் ஜி.எஸ்.டி. எண் பெற வேண்டியது இல்லை. ஆனால் மற்ற பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. எண் இல்லாத வியாபாரிகளுக்கு பொருட் களை வழங்க மறுக்கின்றனர். இதனால் சுமார் 5 லட்சம் வியாபாரிகள் அழிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. ஆகையால் ரூ.20 லட்சம் என்று இருப்பதை ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டும். ஜி.எஸ்.டி. எண் பெறுவதற்கு வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் தாமதமாக கணக்கு தாக்கல் செய்தால் அபராதம் விதிப்பதையும் மாற்ற வலியுறுத்தி உள்ளோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு 1 மணி வரை கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும். இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய அனுமதியை வழங்க வேண்டும். சிவன் கோவில் முன்பு அமைக்கப்பட்டு உள்ள இரும்பு தடுப்புகளை அகற்ற வேண்டும். தமிழ்நாட்டில் வலுவான அரசு வேண்டும். அப்போது தான் ஜி.எஸ்.டி. போன்ற சட்டங்களை எதிர்த்து போராட முடியும். நடிகர் கமல்ஹாசன் உள்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story