சென்னையில் இருந்து நாகர்கோவில் வந்தபோது ஓடும் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம் செய்த டிரைவர்
குமரி மாவட்டம் திங்கள் சந்தையை சேர்ந்த ஒரு மாணவி சென்னையில் படித்து வருகிறார். இவர் ஊருக்கு வருவதற்காக நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து நாகர்கோவில் வரும் அரசு விரைவு பஸ்சில் பயணம் செய்தார்.
நாகர்கோவில்,
நள்ளிரவு 2 மணியளவில் திருச்சி அருகே பஸ் வந்துகொண்டு இருந்தபோது மாணவியிடம் பஸ்சின் மாற்று டிரைவர் சில்மிஷம் செய்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டார். மேலும், டிரைவரை அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. உடனே சக பயணிகள் சம்பந்தப்பட்ட டிரைவரை எச்சரித்தனர். இதற்கிடையே பஸ்சில் நடந்த சம்பவத்தை மாணவி தன் பெற்றோரிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை வடசேரி பஸ் நிலையத்தில் திரண்டனர். மாணவி வரும் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
இந்த நிலையில் காலை 9.30 மணியளவில் வடசேரி பஸ் நிலையத்துக்கு பஸ் வந்தது. பஸ்சில் இருந்து இறங்கியதும் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிரைவரை மாணவி அடையாளம் காட்டினார். உடனே அவருடைய உறவினர்கள் அந்த டிரைவரை சரமாரியாக தாக்கி புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த வடசேரி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே போக்குவரத்துத்துறை அதிகாரிகளும் சென்று சம்பந்தப்பட்ட டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து மாணவியும், அவருடைய உறவினர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story