பிள்ளையார் கரைப்பு பிரச்சினைக்கு பிள்ளையார் சுழிபோடுவோம்
விநாயகர் சதுர்த்தி... இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் ஒன்று. பெரும்பாலான வீடுகள், நிறுவனங்களில் விதவிதமான அளவு, நிறம், அவதாரங்களில் விநாயகரை வைத்து வழிபடுகிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி... இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் ஒன்று. பெரும்பாலான வீடுகள், நிறுவனங்களில் விதவிதமான அளவு, நிறம், அவதாரங்களில் விநாயகரை வைத்து வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது ஒரு விநாயகர் சிலையாவது அமைத்து 2 அல்லது 3 நாட்கள் வழிபட்டு நீர்நிலைகளில் கரைத்து வருகிறார்கள்.
எவ்வளவு ஆடி, ஓடினாலும் கடைசியில் ஒன்றும் இல்லாமல் கரைந்து போவதுதான் வாழ்க்கை என்று விநாயகர் சதுர்த்தியின் தத்துவத்தை கூறுபவர்களும் உண்டு.
களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும்போது அது நீரோடு கலந்து, விவசாய நிலங்களுக்கு பாயும். அப்போது பயிர்களுக்கு ஊட்டம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
தமிழகம் முழுவதும் கடந்த 25-ந் தேதி சுமார் 50 ஆயிரம் விநாயகர் சிலைகளாவது வைக்கப்பட்டு இருக்கலாம். இந்த சிலைகளுக்கான வழிபாடுகள் முடிந்து கடந்த 4 நாட்களாக அனைத்து இடங்களிலும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன.
கடலோரத்தில் இருப்பவர்களுக்கும், அங்கு வைத்திருந்த விநாயகருக்கும் கவலை இல்லை. அங்கே கடலில் போடப்படும் விநாயகர் ஆழமான தண்ணீரில் அழகாக கரைந்துவிடுவார்.
ஆனால் கடல் இல்லாத வற்றிய ஆறுகளும், காய்ந்த குட்டைகளும், வறண்ட ஏரிகளும் உள்ள ஊர்களில் விநாயகரை எப்படி கரைத்தார்கள்? விநாயகர் உண்மையிலேயே கரைந்தாரா?...
ஆட்டம் பாட்டத்தோடு, வாண வேடிக்கையோடு தலைவர்கள் கொடி அசைத்து தொடங்கிவைக்க மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றிலோ, ஏரியிலோ, குட்டைகளிலோ தேங்கி கிடக்கும் சிறிதளவு தண்ணீரில் போடப்பட்டுள்ளன.
மக்கும் காகித கூழாலும், சாயமேற்றாத வண்ணத்தாலும் செய்த சிலைகள் என்று கூறப்பட்டாலும், தேங்கிக்கிடக்கும் சிறிதளவு தண்ணீரில் அந்த சிலைகள் எப்படி கரையும்?
கரையாமல் சிறுசிறு துகள்களாக மிதக்கும் வண்ணம் கலந்த காகித கூழை ஏற்கனவே பசியோடு இருக்கும் மீன்கள் தின்றால்...அவைகள் இறக்குமே. சில இடங்களில் ஆற்றின் கரைகளில் குழிதோண்டி அதில் ஊற்றெடுக்கும் தண்ணீரில் விநாயகர் சிலைகளை போட்டு அமுக்குகிறார்கள். அப்போது விநாயகரை பார்ப்பதற்கே பாவமாக இருக்கிறது.
தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் பாதி கரைந்தும், மீதி கூழாகவும் பல நீர்நிலைகளில் ஏராளமான சிலைகள் அப்படியே கிடக்கின்றன.
இதை தவிர்க்க அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டும். நீர் நிலைகள் வற்றிக்கிடக்கும் பஞ்ச காலங்களில் விநாயகர் சதுர்த்தியின்போது சிலைகளை முறையாக கரைக்க அரசு மாற்று ஏற்பாடு செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும். மாசுபாட்டையும் குறைக்கலாம்.
கடலில் கரைப்பதற்கு வசதி இல்லாத ஊர்களில் பெரிய அளவில் அமைக்கப்படும் சிலைகளை கடல் பகுதிக்கு சரக்கு ரெயில் வண்டிகளில் கொண்டு சென்று முறையாக கடலில் கரைக்க வழிவகுக்கலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்கனவே வறண்டு கிடக்கும் ஏரி, குளம் குட்டைகளில் தற்காலிகமாக ஓரளவு தண்ணீரை நிரப்பி, அதில் விநாயகர் சிலைகளை கரைத்து, அந்த தண்ணீரை முறையாக சுத்திகரித்து வடிகாலில் விட்டுவிடலாம்.
எதுவுமே முடியவில்லை என்றால், அந்தந்த பகுதியில் உள்ள வறண்ட நீர்நிலைகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொக்லைன் மூலம் ஆழமாக தோண்டி அதில் கரைக்க செய்யலாம்.
இப்படி ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய அத்தியாவசிய சூழ்நிலையில் தமிழகம் இருக்கிறது.
அடுத்த ஆண்டாவது விநாயகரை அழகாக கரைக்க பிள்ளையார் சுழி போடுவோம்.
-ஊஞ்சை லாலா

Related Tags :
Next Story