குடியாத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல்


குடியாத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 2 Sept 2017 4:30 AM IST (Updated: 1 Sept 2017 10:59 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலையில் விரக்தியடைந்த அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

குடியாத்தம்,

‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலையில் விரக்தியடைந்த அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டித்தும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

 நகர செயலாளர் குமரேசன் தலைமையில் நடைபெற்ற சாலைமறியலில் மாவட்ட செய்தி தொடர்பாளர் வாசுதேவன், தொகுதி செயலாளர் வேதாச்சலம், ஒன்றிய செயலாளர் விடுதலைசெழியன், மாவட்ட பொருளாளர் செல்லையன், மாவட்ட தொண்டரணி ராஜேஷ், விவேக், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மறியலால் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story