மயிலாடுதுறையில் மாரத்தான் போட்டி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்.
குத்தாலம்,
மயிலாடுதுறையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் தொடக்க நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், பவுன்ராஜ், பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து மகளிருக்கான மாரத்தான் போட்டி, மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளி முன்பு தொடங்கி தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. ஆண்களுக்கான மாரத்தான் போட்டி, மயிலாடுதுறை ரெயில்வே மேம்பாலத்தில் தொடங்கி தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது.
இதில் முதல் 3 இடங்களை பெற்ற மகளிர் மற்றும் ஆண்களுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரத்து 500, ரூ.5 ஆயிரமும், 4-ம் இடம் முதல் 10-வது இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா ரூ.1,000-மும் வருகிற 20-ந் தேதி நாகையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். நேற்று மாரத்தான் போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கும், போட்டி தூரத்தை முழுமையாக கடந்தவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் உதவி கலெக்டர் (பொறுப்பு) காமராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், அ.தி.மு.க. நகர செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் சந்தோஷ்குமார், தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story