தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
மயிலாடுதுறையில், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் உள்ள 36-வது வார்டு பகுதியில் கடந்த பல மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக்கோரி 36-வது வார்டில் உள்ள பர்மா காலனி, மாந்தோப்புத்தெரு, காளியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தரங்கம்பாடி மெயின்ரோட்டில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பொதுமக்கள், இந்த பகுதியில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று நகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தினர். அதற்கு நகராட்சி ஆணையர், தற்போது டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. போதுமான நிதி கிடைத்தவுடன் விரைவில் இந்த பகுதியில் புதிய குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வழங்கப்படும் என்று கூறினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சிரமப்பட்டனர்.

Related Tags :
Next Story