வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.42ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.42ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Sept 2017 4:00 AM IST (Updated: 2 Sept 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.42 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மன்னார்குடி,

மன்னார்குடி நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பான் மசாலா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மன்னார்குடி நகராட்சி ஆணையருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செல்வராஜ் தலைமையில், சுகாதார ஆய்வாளர் பிரபாகரன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மணாழகன், ரெங்கராஜன், செல்வகுமார், குருசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது மேல இரண்டாம் தெருவில் ஒரு வீட்டின் சமையலறை மற்றும் படுக்கை அறையில் சுமார் ரூ.42 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் சுமார் ரூ.7 ஆயிரத்து 300 மதிப்பிலான போலியான இலவங்கப்பட்டையும் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து புகையிலை பொருட்கள் மற்றும் இலவங்கப்பட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட் களை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) இளங்கோவன் பார்வையிட்டார். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செல்வராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:-

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் இருந்து மாதிரி எடுத்து உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புகையிலை பொருட்களால் புற்றுநோய் ஏற்படுவதாலும், போலியான இலவங்கப்பட்டை சாப்பிடுவதால் கல்லீரல் வீக்கம் ஏற்படுவதாலும் தமிழக அரசு இதை தடை செய்துள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து உணவு பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story