பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்


பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Sept 2017 4:00 AM IST (Updated: 2 Sept 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா, நீட் தேர்வின் காரணமாக மருத்துவம் படிக்க முடியாததால் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை யடுத்து அவருடைய தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செய லாளர் எம்.பி.மனோகரன் தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில், மாநில பொறுப்பாளர்கள் வீர.செங்கோலன், வழக்கறிஞர்கள் சீனிவாசராவ், பி.காமராஜ், நகர பொறுப்பாளர் சண்முகசுந்தரம், செய்தி தொடர்பாளர் உதயக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. மறியலால் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Next Story