அரியலூர்- பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி


அரியலூர்- பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி
x
தினத்தந்தி 2 Sept 2017 4:15 AM IST (Updated: 2 Sept 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரை அடுத்த ஆலம்பாடியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர் நிலைப்பள்ளியில் 45-வது ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சி நடந்தது.

பெரம்பலூர்,

 இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வெ.கண்ணன் தலைமை தாங்கினார். கண்காட்சியை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார்.

கண்காட்சியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை யிலான மாணவ, மாணவிகள் மழைநீர் சேமிப்பு, சூரிய ஒளியை பயன்படுத்துவதன் அவசியம், மனித உடற்கூறுகள், வேதிவினைகள், இயற் பியல் மாற்றங்கள், நிலக்கூறுகள், நீர்நிலைகள், காடுகள், மலைகள் உள்ளிட்ட இயற்கையை பராமரிப்பதன் அவசியம் குறித்த படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். கண்காட்சியை உயர்நிலை, தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளும், கிராம மக்களும் பார்வையிட்டனர். முடிவில் அறிவியல் ஆசிரியர் ரவிக்குமார் நன்றி கூறினார்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா வேப்பூர் ஒன்றியம் சு.ஆடு துறையில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை தலைமை ஆசிரியை ராணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பச்சமுத்து ஆகியோர் தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் சாலை பாதுகாப்பு, சிறு தானிய உணவு வகைகள், மழை நீர் சேகரிப்பு, புதிர் கணிதம் உள்பட பல படைப்புகளை மாணவ, மாணவிகள் காட்சிக்கு வைத்திருந்தனர். பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் படைப்புகளை பார்வையிட்டு பாராட்டினர். கண்காட்சியில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல் மங்களமேட்டை அடுத்துள்ள லெப்பைக்குடிக்காடு அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் கலியமூர்த்தி தலைமையிலும், லெப்பைக்குடிக்காடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை மகாலெட்சுமி தலைமையிலும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வாரியங்காவல் அருகே உள்ள செங்குந்தபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி உதவி ஆசிரியர் மணி தொடங்கி வைத்தார். கண்காட்சியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை யிலான மாணவ, மாணவிகள் ஆரோக்கியமான உடல்நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவுநீர் மேலாண்மை, காற்றாலை மின் உற்பத்தி, போக்குவரத்து தகவல் தொழில்நுட்பம், தொழிற்சாலைகளில் மாசு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.

இதில் ஆரோக்கியமான உடல்நலம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை ஆகியவை சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்டன. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி அறி வியல் ஆசிரியர் சிவக்குமார், மணிவண்ணன், ஆசிரியை சுகுணா ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story