அரியலூர், ஜெயங்கொண்டத்தில் பள்ளிகளில் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
அரியலூர், ஜெயங்கொண்டத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
தாமரைக்குளம்,
அரியலூர் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பொய்யாமொழி, அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அதிகாரி கலைமதி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து கண்காட்சியின் முக்கியத்துவத்தை மாணவ, மாணவிகளுக்கு எடுத்து கூறினார்.
இக்கண்காட்சியில் அரியலூர் மற்றும் திருமானூர் ஒன்றியங்களில் உள்ள நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 52 பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 113 மாணவ, மாணவிகள் படைப்புகளை வைத்திருந்தனர். இதில் 5 பிரிவுகளில் ஆக்கப்பூர்வமான அறிவியல் சார்ந்த வளர்ச்சிகள் என்ற மைய கருத்தின் அடிப்படையில் 88 படைப்புகள் இடம் பெற்றிருந்தன. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் குணபாலினி, தலைமை ஆசிரியர்கள் தங்கமணி, அன்பரசி ஆகியோர் செய்திருந்தனர். நடுவர்களால் கல்வி மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 படைப்புகளை உருவாக்கிய மாணவ, மாணவிகள் அரியலூர் வருவாய் மாவட்ட அளவில் நடைபெறும் கண்காட்சியில் கலந்து கொள்வார்கள்.
இதேபோல் ஜெயங்கொண்டம் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கண்காட்சியை மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார். பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.
கண்காட்சியில் தொழிற்சாலையில் மாசு கட்டுப்பாடு செய்தல், சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பு, வெப்ப ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுவது, வீணாகும் வெப்ப ஆற்றலை சேமிக்கும் முறை, ஆரோக்கியமான உடல் நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவுநீர் மேலாண்மை, காற்றாலை மின்உற்பத்தி, போக்குவரத்து தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட படைப்புகளை கல்வி மாவட்டத்தில் உள்ள 78 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பார்வைக்கு வைத்திருந்தனர். அவற்றை பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பார்வையிட்டனர். கல்வி மாவட்டத்தில் உள்ள 12 தலைமை ஆசிரியர்களை கொண்ட குழுவினர் கண்காட்சியை பார்வையிட்டு சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.

Related Tags :
Next Story