எஸ்.எஸ்.எல்.சி .துணை தேர்வுக்கு தனி தேர்வர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
எஸ்.எஸ்.எல்.சி. துணை தேர்வுக்கு தனி தேர்வர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல்முருகன் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை,
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள், முந்தைய பருவங்களில் தேர்வு எழுதியோர், தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாடத்தை பொறுத்தவரை செய்முறை தேர்வில் தேர்ச்சி பெற்று அறிவியல் கருத்தியல் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் கருத்தியல் தேர்வில் தேர்வு எழுத விண்ணப்பக் கலாம்.செய்முறை தேர்வு மற்றும் கருத்தியல் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் செய்முறை மற்றும் கருத்தியல் தேர்வில் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். முதன்முறையாக எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதுபவர்கள் அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி 14½ வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் பெண் தனி தேர்வர்கள் அறந்தாங்கி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், புதுக்கோட்டை ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் விண்ணப்பிக்கலாம்.
இதைப்போல ஆண் தனி தேர்வர்கள் புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியிலும், அறந்தாங்கி ஆண்கள் மேல்நிலையிலும், ஆண் மற்றும் பெண் தனி தேர்வர்கள் மணமேல்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கீரனூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வருகிற 7-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் (அரசு விடுமுறை நாள் தவிர) விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் ரூ.125 உடன் கூடுதலாக ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.175 அரசு சேவை மையத்தில் செலுத்த வேண்டும். மேலும் விரிவான விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story