நாமக்கல்லில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்


நாமக்கல்லில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 2 Sept 2017 4:25 AM IST (Updated: 2 Sept 2017 4:25 AM IST)
t-max-icont-min-icon

வழக்குகளில் தொடர்புடைய வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி நாமக்கல்லில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்,

கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்குகளில் தொடர்புடைய வக்கீல்கள் மீது பார்கவுன்சில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வலியுறுத்தி நாமக்கல்லில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்த உத்தரவால் சென்னையை தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 400 வக்கீல்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்றும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 100 வக்கீல்கள் பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்றும் வக்கீல்கள் தெரிவித்தனர்.

மேலும் போலீசார், வக்கீல்கள் மீது பொய் வழக்கு போடும் நிலை உருவாகும் எனவும் அவர்கள் கூறினர். திருச்செங்கோடு, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரம் வக்கீல்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றங்களைச் சேர்ந்த வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர். பிறகு அவர்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ராசிபுரம் குற்றவியல் வக்கீல் சங்கத் தலைவரும், தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்க பொருளாளருமான வக்கீல் காமராஜ் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வழக்குகளில் தொடர்புடைய வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தால் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story