நதிகளை மீட்க விழிப்புணர்வு பிரசார பயணம் கன்னியாகுமரியில் 4-ந் தேதி தொடங்குகிறது
நதிகளை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து புதுடெல்லி வரை விழிப்புணர்வு பிரசார பயணம் வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது. பிரசார பயணத்தை கன்னியாகுமரியில் ஈஷா யோகா சத்குரு தொடங்கி வைக்கிறார்.
கன்னியாகுமரி,
ஈஷா யோகா சத்குரு இந்தியாவில் உள்ள நதிகள் வற்றி அழிந்து வருவதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் புதுடெல்லி வரை “நதிகளை மீட்போம்: பாரதம் காப்போம்“ என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசார பயணம் நடத்த முடிவு செய்துள்ளார். அதன்படி அவர் தனது பிரசார பயணத்தை கன்னியாகுமரியில் வருகிற 4-ந் தேதி தொடங்குகிறார். இந்த விழிப்புணர்வு பிரசார பயணத்தின் தொடக்கவிழா அன்று மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் நடக்கிறது.
விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நடிகை சுகாஷினி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த பயணத்தின் போது ஈஷா யோகா சத்குரு அவரே கார் ஓட்டி இந்த பயணத்தை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த பயணம் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை, திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, புதுச்சேரி, மைசூர், பெங்களூரு, சென்னை, அமராவதி, ஐதராபாத், மும்பை, அகமதாபாத், இந்தூர், போபால், லக்னோ, ஜெய்ப்பூர், சண்டிகர், ஹரித்துவார் வழியாக காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ந் தேதி புதுடெல்லியை சென்று அடைகிறது.
ஈஷா யோகா சார்பில் விழிப்புணர்வு பிரசார பயணம் மட்டும் அல்லாமல் நதிகளை மீட்க மக்களிடம் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நதிகளை மீட்க செல்போனில் இருந்து ஒரு ‘மிஸ்டு கால் கொடுங்கள்‘ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்த பதாகைகளை ஈஷா யோகா உறுப்பினர்கள் நாகர்கோவில் நேற்று பல இடங்களில் வைத்திருந்தனர். மேலும், அதே பதாகைகளை கையில் பிடித்தபடியும், அதை அட்டை பெட்டிபோல் செய்து தலையில் அணிந்து கொண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Related Tags :
Next Story