வாகைகுளம் வாகைபதி நாராயணசுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


வாகைகுளம் வாகைபதி நாராயணசுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 2 Sept 2017 4:53 AM IST (Updated: 2 Sept 2017 4:53 AM IST)
t-max-icont-min-icon

வாகைகுளம் வாகைபதி நாராயண சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அம்பை,

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ளது வாகைக்குளம். இங்குள்ள வாகைபதி நாராயண சுவாமி கோவிலில் ஆவணி தேரோட்ட திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு ஆராதனை, பூஜைகள் நடந்தன. இரவு தண்டிகை வாகனத்தில் சுவாமி வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் தண்டில் வாகனம், கருட வாகனம், சிம்ம வாகனம், அன்னப்பச்சி, சூரியன், நாகம், பூம்பல்லாக்கு, குதிரை, அன்னம், இந்திரன், காளை உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதி உலா வந்து அன்புகொடி மக்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

முக்கிய நிகழ்ச்சியான 8, 10-ம் நாளில் பால்குடம் எடுத்தல், முடிகாணிக்கை அளித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, பணிவிடை, பால் தர்மமும் இரவு 8 மணிக்கு அன்னதர்மமும் நடக்கிறது.
11-ந் திருநாளான வருகிற 11-ந் தேதி மதியம் 4 மணிக்கு தேரோட்டமும், இரவு 11 மணிக்கு காளை வாகனத்தில் சுவாமி பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மறுநாள் அதிகாலை 2 மணிக்கு கொடி இறக்கம் நடக்கிறது.
தினமும் வாகைபதி இளைஞர் குழுவினரின் செண்டை மேளம், சிங்காரி மேளம் மற்றும் நையாண்டி மேளமும், சிறப்பு வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஏற்பாடுகளை வாகைபதி அன்பு கொடிமக்கள் செய்து வருகின்றனர்.

Next Story