தேநீர் தேவதை..!
கோவில் இல்லாத ஊர்களை கூட பார்த்துவிடலாம். ஆனால் டீ கடை இல்லாத தெருக்களை பார்க்க முடியாது. ஆட்டோ டிரைவரானாலும், ஆடம்பர கார் ஓனரானாலும் தேநீர் அருந்தும் பழக்கத்தில் ஒன்றுபடுகின்றனர்.
கோவில் இல்லாத ஊர்களை கூட பார்த்துவிடலாம். ஆனால் டீ கடை இல்லாத தெருக்களை பார்க்க முடியாது. ஆட்டோ டிரைவரானாலும், ஆடம்பர கார் ஓனரானாலும் தேநீர் அருந்தும் பழக்கத்தில் ஒன்றுபடுகின்றனர். அலுவலகங்களில் வேலை நடக்கிறதோ இல்லையோ, நேரத்திற்கு டீ சப்ளை நடந்தாக வேண்டும். அந்தளவிற்கு தவிர்க்க முடியாத பழக்கமாக தேநீர் மாறிவிட்டது. இப்படி இந்தியர்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த தேநீர் பழக்கம், தற்போது ஆஸ்திரேலியர்களையும் தொற்றிக்கொண்டிருக் கிறது. ஆஸ்திரேலியர்கள் ருசியான தேநீரை, தேடி சென்று சுவைக்கிறார்கள். இந்தியாவின் பாரம்பரியமான தேநீரை, ஆஸ்திரேலியாவில் கமகமக்க செய்த பெருமை... சண்டிகரை சேர்ந்த உப்மா விர்தி யையே சாரும். இவரது பெயரை போன்றே இவரது தேநீர் ஆர்வமும் வித்தியாசமானது.
ஆஸ்திரேலியாவிற்கு சட்டம் பயில சென்றவர் வழக்கறிஞர் என்பதை மறந்துவிட்டு அங்கேயே டீ கடை வைத்துவிட்டார். ‘சாய் வாலி’ என்ற பெயரில் மெல்போர்னில் இயங்கும் இவரது டீ கடையில் எந்நேரமும் கூட்டம் அலைமோதுகிறது. வரிசையில் நின்றும் தேநீர் சுவைக்கிறார்கள். சிலர் சுவையான தேநீர் தயாரிக்க உப்மாவிடம் பயிற்சி பெறுகிறார்கள். தேநீர் கேத்தலும், தேநீர் கோப்பையுமாக நின்று கொண்டிருந்த உப்மா விர்தியிடம் பேசினோம்.
“இந்த தேநீர் வெற்றிக்கு என்னுடைய தாத்தாதான் காரணம். அவர் ஆயுர்வேத மருத்துவர். மருத்துவரானாலும் தேநீரை மிகவும் சுவையாக தயாரிப்பார். தேநீர் தயாரிப்பது ஒரு கலை என்று அடிக்கடி சொல்வார். அதுவும் மசாலா வாசனைப் பொருட்கள், மூலிகை பொருட்களை பக்குவமாக கலந்து ஆயுர்வேத தேநீராக தயாரிப்பது அவரது ஸ்டைல். அதன் மணமும், சுவையும் மனதை மட்டுமல்ல உடலையும் சிலிர்க்க வைக்கும்.
தாத்தா அவரது தேநீர் பக்குவத்தை எனக்கு சொல்லி தந்தார். அதனால் சுவையான, ருசியான தேநீர் தயாரிப்பது ஒரு பொழுதுபோக்காக மாறிவிட்டது. உற வினர் வீடுகளுக்கு சென்றால், அவர்களது சமையல் அறைக்குள் நேராக புகுந்துவிடுவேன். வீட்டிலும் ஸ்பெஷல் டீ போடவேண்டும் என்றால் என்னைத்தான் அழைப்பார்கள். என் சகோதரரின் திருமணத்தின்போது வந்திருந்த விருந்தினர்களுக்கு ஆயிரம் கோப்பை தேநீரை தயாரித்து பரிமாறினேன். அழகான ஜோடி என்று வாழ்த்தியவர்கள், அருமையான தேநீர் என்றும் பாராட்டினார்கள்” என்று தேநீர் தயாரிக்கும் ஆசையை இளஞ்சூட்டோடு பரிமாறினார். அத்தோடு பகுதி நேரமாக ஆரம்பித்த தேநீர் வியாபாரம் இன்று படுஜோராக நடப்பதையும் பகிர்ந்து கொண்டார்.
“இந்தியாவில் இருந்த வரை தேநீர்தான் என்னுடைய உலகம். தேநீர் தயாரிப்பேன். அதை சுவைப்பேன். வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிடுவேன். இப்படி தேநீருடன் பிசியாக இருந்த எனக்கு ஆஸ்திரேலியாவில் சட்டம் பயிலும் வாய்ப்பு கிடைத்தது. மகிழ்ச்சியாக கிளம்பிவிட்டேன். ஆஸ்திரேலியர்களுக்கு சூப், காபி போன்றவை மட்டுமே பிடிக்கும் என்பதால் தேநீர் கடைகளை அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை. தென்படும் ஓரிரு தேநீர் கடைகளிலும் சுவையான தேநீர் கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று யோசித்தபோதுதான் வீட்டிலேயே தேநீர் தயாரிக்கும் ஆசை வந்தது. அதை பெற்றோரிடம் தெரிவிக்க.. அடுத்த இருநாட்களிலேயே தேயிலை பொருட் களையும், மூலிகை பொருட்களையும் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்தனர். அதனால் ஆஸ்திரேலியாவில் சூடான, சுவையான தேநீர் கொதிக்க ஆரம்பித்துவிட்டது” என்பவர் ‘சாய் வாலி’ என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கும் தேநீர் கடையின் முன்கதையையும் கூறினார்.
“என்னுடைய வீட்டில் கமகமவென தயாராகும் தேநீரை அக்கம்பக்கத்தினர் விரும்பி சுவைத்தனர். விதவிதமான தேநீரை தயாரித்தும் கேட்டனர். அப்போதுதான் தேநீர் கடை நடத்தும் ஆசை வந்தது. இந்த முறை என்னுடைய அண்ணனை தொடர்பு கொண்டு தேநீர் சம்பந்தப்பட்ட அத்தனை பொருட்களையும் ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு வரும்படி கேட்டுக்கொண்டேன். அனைத்தும் வந்து சேர்ந்தன. சட்டம் படித்து முடித்த கையோடு... ‘சாய் வாலி’ என்ற தேநீர் கடையையும் ஆரம்பித்தேன். மெல்போர்ன் நகரில் கடை அமைந் திருந்ததால்... ஏகப்பட்ட வரவேற்பு. முதலில் 10 வகை தேநீருடன் ஆரம்பமான கடையில் இன்று 100-க்கும் மேற்பட்ட டீ ரகங்கள் தயாராகின்றன. விதவிதமான டீ தூள், இலைத்துகள்கள், தேநீர் கப்புகள், தேநீர் வடிகட்டி, தேநீரில் தயாரித்த சால்லெட்டுகள் என ஏகப்பட்ட பொருட்கள் கடையில் நிரம்பி வழிகின்றன” என்பவரிடம் தேநீரில் அப்படி என்ன வித்தியாசம் இருக்கிறது என்று கேட்க, விரிவாக பேச தயாரானார்.
“தேயிலை பயிர் செய்யப்படும் நிலப்பரப்பையும், பதப்படுத்தும் முறையையும் பொருத்தே தேநீரின் சுவை மாறுபடும். அசாம், இலங்கை போன்ற பகுதிகளில் பயிரிடப்படும் தேயிலைகளில் தயாராகும் டீ ‘ஸ்டிராங்’கானதாக இருக்கும். மிதமான சுவைக்கு டார்ஜிலிங், நீலகிரி போன்ற பகுதிகள் பிரபலம். இத்துடன் ஒயிட் டீ, கிரீன் டீ, ஊலாங்க் டீ, பிளாக் டீ... என்று தேயிலைகளை பதப்படுத்தும் முறையிலும் தேநீரின் சுவை வித்தியாசப்படும்.
‘பிளாக் டீ’ என்ற முறையில் பதப்படுத்தும் தேயிலையுடன் பால் சேர்த்தால் மட்டுமே தேநீர் சுவைக்கும். இல்லையேல் கசந்து விடும். இத்தகைய பழக்கம் இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் மட்டுமே இருக்கிறது. மற்ற நாடுகளின் வழக்கப்படி தேநீர் என்பது கொதிக்கும் தண்ணீரிலே தயாராகிறது. அதே வழக்கம் ஆஸ்திரேலியாவிலும் கடைப்பிடிக்கப்பட்டதால்..., பால் கலந்த தேநீரை வித்தியாசமானதாக பார்த்தனர். ஆரம்பத்தில் சுவைக்க தயங்கினாலும், வெகுவிரைவில் ஏற்றுக்கொண்டனர்.
ஆஸ்திரேலியர்களுக்காகவே இன்று 24 மணிநேரமும் தேநீர் கொதித்துக் கொண்டு இருக்கிறது. அவர்கள் தேநீரை ரசித்து ருசித்த விதம், பகுதி நேரமாக ஆரம்பித்த வேலையை முழுநேர வேலையாக மாற்றிவிட்டது. தற்போது வழக்கறிஞர் வேலையை பகுதி நேரமாக பார்த்து வருகிறேன்” என்பவருக்கு இந்த ஆண்டிற்கான ‘வளரும் பெண் தொழிலதிபர் விருது’ கிடைத்திருக்கிறது.
“பாதாம் டீ, மசாலா டீ, காஷ்மீர் குங்குமம் டீ, ஏலகிரி ஸ்பெஷல் டீ, சண்டிகரின் ஸ்பெஷல் சாய், மஸ்கோத்து சாய்... என சுவைக்க தூண்டும் தேநீர் வகைகளை பட்டியலிட்டு தயாரித்து கொடுக்கிறேன். ஆஸ்திரேலியர்கள் மட்டுமின்றி இந்தியர் களும் விரும்பி சுவைக்கிறார்கள். சமீபத்தில் இந்தியா வந்தபோது அமிர்தசரஸ் பொற்கோவிலில் 5 ஆயிரம் பேருக்கு தேநீர் தயாரித்து கொடுத்தேன். அதை கின்னஸ் சாதனையாக பதிய சொன்னார்கள். ஆனால் அத்தகைய விளம்பரங்களில் எனக்கு விருப்பமில்லை. இந்தியாவின் பாரம்பரியத்தையும், பாரம்பரிய பழக்கத்தையும் உலகிற்கு தெரியப்படுத்தினாலே போதும் என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறேன். தேநீர் வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தில் டார்ஜிலிங், குன்னூர்... போன்ற இடங்களில் தேயிலை ஆராய்ச்சிக் கூடங்களை அமைத்து, தேநீர் சம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறேன். அதன்படி தேயிலை பொருட்கள் வெகு விரைவில் மருந்தாக பயன்பட இருக்கிறது” என்று தித்திப்பாக முடித்தார்.

Related Tags :
Next Story